மத்திய அரசு ஜி பி  எஸ் மூல்ம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம்

டெல்லி மத்திய அரசு ஜி பி எஸ் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முறை வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை குறித்து /விளக்கம் அளித்துள்ளது. ”செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் … Read more

ஒரு கை பார்ப்போம் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் சவால்

பொன்னேடி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இன்று/ பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வ மு.க.ஸ்டாலின் ”இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதி தரமுடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது என அமித்ஷாவால் உறுதி அளிக்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது … Read more

ஜக்தீப் தன்கருக்கு சி பி ஐ கண்டனம்

சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு சிபிஐ மாநில செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் ”தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழக ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, கவர்னரின் அத்துமீறல்கள் மீது நியாயம் வழங்க … Read more

11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட 100 கிராம் ‘கோல்டு பிஸ்கட்’

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 100 கிரேம் எடையுள்ள தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தங்கக்கட்டியை மருத்துவர்கள் வயிற்றில் இருந்து அகற்றியுள்ளனர். SuZhou பகுதியில் வசிக்கும் அந்த சிறுவன் வீட்டில் இருந்த தங்கக்கட்டியை விழுங்கிய நிலையில் அவனது வயிறு சிறிது உப்பிய போதிலும் வயிற்றில் கடுமையான வலி எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அச்சிறுவனை உடனடியாக Soochow பல்கலைக்கழக சிறார் மருத்துமனைக்கு அவனது பெற்றோர்கள் கொண்டுச் சென்றனர். … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 390 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

திருவள்ளூர்: திருவள்ளுர்  மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு  390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரசு விழாவில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொதுமக்களுக்கு … Read more

தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் கொண்டுவர நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் கொண்டுவர நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக, மார்ச் 7, 2025  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் புதிதாகப் பெயரிடப்பட்ட ராஜாதித்ய சோழர் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற CISF தினத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீப காலம் வரை மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) தேர்வுகளை நடத்துவதில் தாய்மொழிக்கு இடமில்லை. ஆனால், பிரதமர் மோடியின் முடிவுன்படி,  [அரசியலமைப்பின்] … Read more

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! அரசாணை வெளியீடு

சென்னை:  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் அரசாணையில்  திருத்தம் செய்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை  கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், அரசு பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களின் பணி நியமனம் ம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

ஜகதீப் தன்கருக்கு திருச்சி சிவா எம் பி கடும் எதிர்ப்பு

டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு திருச்சி சிவா எம் பி கடும் எதிர்ப்புr தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜகதீப் தன்கரின் கருத்து … Read more

இன்று சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் இன்றுமின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் ரெட்ஹில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது … Read more

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை! பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில்…

சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என  பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியை செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷா, மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என்று கூறினார்.  இதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 16)ந்தேதி செய்தியாளர்களிடம் … Read more