சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) “நிறுத்தத்தில்” வைத்திருக்கும் இந்தியாவின் முடிவு குறித்து உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. IWT இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒப்பந்தம் முழுவதும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீர் பகிர்வு தொடர்பாக எழும் சர்ச்சைகளில் மத்தியஸ்தராக உலக வங்கி (WB) முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 24, 2025), பாகிஸ்தான் பிரதிநிதி சையத் … Read more

பாகிஸ்தான் தடை : இந்திய விமான பயண நேரம் அதிகரிப்பு

டெல்லி பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த விதித்த தடையால் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  பாகிஸ்தானியர்களுக்கு தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது. பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து … Read more

24 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மேதா பட்கர் கைது

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும் சமூக ஆர்வலருமான மேதா பட்கர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நன்னடத்தை பத்திரங்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காக பட்கருக்கு எதிராக புதன்கிழமை (ஏப்ரல் 23) டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டைப் பிறப்பித்தது. பட்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தென்கிழக்கு … Read more

புதிய பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் – நூலகங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைக்கு பதில் … Read more

காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத  தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  பந்திபோராவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான,  லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர் அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஜே & கேவின் பந்திப்போராவில் பாதுகாப்புப் படையினரால் லஷ்கர் இ தொய்பாவின் உயர் தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-தொய்பாவின் … Read more

ஆளுநர் ரவி தலைமையில் தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு! தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு…

கோவை: உதகையில் இன்று ஆளுநர் ரவி  தலைமையில் நடைபெறும்  துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில தனியார் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, உதகையில் இன்று நடைபெறுகிறது. உதகை ராஜ்பவனில் நடைபெறும் இந்த மாநாட்டை துணை குடியரசு தலைவர், ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். இந்த நிலையில்,  தமிழக ஆளுநர் ரவி ஏற்பாடு … Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் அபாயம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம்  எதிரொலி  வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல்  நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும்,  சில பகுதிகளில் மாணவர்கள்மீது தாக்குதல் நடைபெற்று உள்ளதாகவும்  ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA)  அச்சம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் உறுதி படுத்தி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் … Read more

மேகதாது அணை திட்ட பணிகள் தொடங்க தயார் : முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளாஃப்ர். நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம். ”பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதலும் அதே மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பது வேறு. சம்பவங்கள் நடைபெறாமல் … Read more

கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட்.  விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம்.

கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட்.  விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம். தல சிறப்பு : இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழங்கை வரை மட்டுமே உள்ள நிலையில் அருள்பாலிப்பதும், பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்வதும் இத்தலத்தின் சிறப்பு. புருஜு என்றாள், அரசர்களின் கோட்டையில் வெளிப்பகுதி! விசாகப்பட்டினத்து அரசர்களின் குலதெய்வமாக கோட்டையின் காவல் தெய்வமாக, விளங்கியிருக்கிறாள் இந்த வீரலெக்ஷ்மி! கோபுரம், விமானம் என்று தனிப்பட்ட கோயிலுக்கு உரிய வெளி அமைப்புகள் ஏதும் இல்லை. சாலையின் நடுவில் … Read more

கோடையை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை

சென்னை கோடை காலத்தை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப … Read more