பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கருத்து…

டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, காற்று மாசுபாடு ஒரு தேசிய பிரச்னை என்பதால்,  பட்டாசு தடை விஷயத்தில்,  இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என்று வலியுறுத்தினார். டெல்லி என்.சி.ஆர் பகுதியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஹரியானா பட்டாசு உற்பத்தியாளர்கள் குழு தாக்கல் … Read more

ஒசூர் அறிவுசார் பெருவழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை:  தொழில்நகரமான ஓசூரில்,  ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய  தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கான டெண்டரை  தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை ஓஎம்ஆர் சாலையின்  இருபுறங்களிலும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதுபோல், ஓசூர் அருகில் உள்ள பாகலுார் பைபாஸ் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, சாட்டிலைட் ரோடு ஆகிய சாலைகளின் இரு புறங்களிலும், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு, கர்நாடக … Read more

சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திராவில் மீட்பு! இளைஞர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது.  இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சமீபத்தில் திருடுபோனது. இந்த சம்பவம்  பேருந்து பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.  சென்னை டூ திருப்பதி  இயக்கப்படும் இந்த  அரசு பேருந்து  பட்டப்பகலில்  திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையில்  சம்பவத்தன்று மாலை புகார் அளிக்கப்பட்டது. … Read more

பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போட்டுக்கொள்ளலாம்! ஒரே நாளில் அறிவிப்பை மாற்றியது மத்தியஅரசு…

டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று  மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போடக்கூடாது என திடீர் தடை விதித்தது. இந்த நிலையில், செப்டம்பர் 10ந்தேதி அந்த உத்தரவை மாற்றி, பிசியோதெரபி  மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் இந்த குழப்பமான உத்தரவுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  நாட்டில் பிசியோதெரபி மருத்துவர்கள் ‘டாக்டர்’ … Read more

தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாடு முந்திரி வாரியம்  என தனி வாரியம் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக வேளாண்துறை அமைச்சர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏற்கனவே வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி,   தமிழ்நாடு முந்திரி வாரியம் எனும் தனி வாரியம் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளிட்டுள்ளார். முந்திரி சாகுபடி தொழிலாளர்கள் நலனுக்காகவும்,  முந்திரி சாகுபடி பரப்பு, உற்பத்தியை மேலும் அதிகரிக்க  தமிழ்நாடு அரசு முந்திரி வாரியத்தை … Read more

தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை கலெக்டர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்  என சென்னை மாவட்ட  கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2021-22 ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய  அறிவிப்புகள் வெளியிடப்பட்டது  அதனப்டி,  தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை சுற்றுலாத்தொழில் வழங்குவதற்கான வழிகாட்டு தல்களை உருவாக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து,   தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் … Read more

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் ராகுல் காந்தி! சிஆர்பிஎஃப் குற்றச்சாட்டு

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார் என அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. அதாவது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் அவர்  ஈடுபடுவதாகக் கூறியுள்ளது.  இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகார்களுக்கு காங்கிரஸ் கட்சியின் … Read more

டெல்லியைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்… விசாரணை நிறுத்தம்…

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பம்பாய் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளத, மேலும் நீதிமன்றத்தில் விசாரணை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகம் காலி செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் கட்டிடம் வெடிக்கப்படும் என்று மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த … Read more

அமெரிக்காவில் மனைவி மற்றும் மகன் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். டல்லாஸ் நகர மையத்தில் உள்ள சூட்ஸ் மோட்டலில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இறந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரமௌலி நாகமல்லையா (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சக ஊழியரான கியூபா நாட்டைச் சேர்ந்த யோர்தானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் (37) கைது செய்யப்பட்டுள்ளார். துணி துவைக்கும் … Read more

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது…

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சார்லி கிர்க் மறைவையொட்டி அமெரிக்க கொடி ஐந்து நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடும்பணியில் அமெரிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு உரிய நபரின் புகைப்படங்களை … Read more