இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் – வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்

இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் ராணுவத்தளபதிகள் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்த மனத்துடன் பிரச்சினைகளைஅணுக சீன அதிகாரிகள் … Read more

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து – முதலமைச்சர்

ஜப்பான் நிறுவனங்களுடன் மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும் . இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சுற்று பயணங்களை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய குறிக்கோள் என்றார்., முன்னதாக விமான … Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சி.. மே மாதத்தில் பண வீக்கம் 25.2 சதவீதமாக குறைவு!

இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்பதாக அரசின் புள்ளி விபரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

எல்லையோர நகரான பெல்கோரட்டில் உக்ரைன் சரமாரித் தாக்குதல்..!

உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது  நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி சரமாரித் தாக்குதல் நடத்தின. ஆளில்லாத டிரோன்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஒரு டிரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது விழுந்து நொறுங்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 குடியிருப்பு வளாகங்கள், 4 தனி வீடுகள், அரசு நிர்வாகக் கட்டடங்கள் பள்ளி மருத்துவமனை போன்ற இடங்கள் … Read more

சிவில் விமானப் போக்குவரத்து விதிகளை எளிமையாக்கும் வரைவு மசோதா தாக்கல்..?

சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. 1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இந்த விதிமுறைகள் தொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் … Read more

காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை கொலை செய்த கணவன் உள்பட 3 பேர் கைது..!

கோயம்புத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலைசெய்து விட்டு, ‘சாணி பவுடர்’ உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற இளம்பெண்ணை வேளாங்கண்ணியில் வைத்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சஞ்சய் தனது கல்லூரித் தோழியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால், தம்பதிக்கு இடையே அடிக்கடி … Read more

திருப்பதி மலை பாதையில் விபத்துகளை தடுக்க போலீசார் நூதன முயற்சி..!

திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து ஊர் திரும்ப வேண்டிய  நிலை ஏற்படுகிறது. எனவே மலை பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் தண்ணீர் தெளித்து  மலைப்பாதையில் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக திருப்பதி மலையில் உள்ள ஜி என் சி … Read more

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்…!

8 மாதமாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சின்னத்திரை இணையரின் திருமண வாழ்க்கை பகீர் குற்றச்சாட்டுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. சின்னத்திரை சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த், சம்யுக்தா. இவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளங்களும் உள்ளன. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சேர்ந்து நடித்த விஷ்ணுகாந்தும் சம்யுக்தாவும் காதலில் விழுந்தனர். இந்த காதலை இருவரும் யூடியூப்பில் நிகழ்ச்சியாகவும் நடத்தி அறிவித்தனர். காதல் ஜோடிகள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து கடந்த 2 மாதங்களுக்கு … Read more

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்…. இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்….?

செங்கல்பட்டில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை, வாகன உரிமையாளருக்குத் தெரியாமல் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி 4 ஆண்டுகளாக தனிப்பிரிவு காவலர் ஒருவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. காவல் நிலையங்களை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இது போன்ற வாகனங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வழக்கின் கதை உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன்எண்டத்தூரைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சிவபாலன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓட்டிச் சென்ற ஹீரோ மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் … Read more

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. 2 பேர் கைது..!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாளை கடற்கரை பகுதிக்கு வந்த பைபர் படகு ஒன்றை சுற்றி வளைத்த அவர்கள், அதில் மறைத்து வைத்திருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோவுக்கும் அதிகமான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடத்தில் ஈடுபட்ட 2 … Read more