அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!

அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கிய பயிற்சி மருத்துவர்களிடம் மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை … Read more

அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. 411கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் ஐந்தரை  மணிநேரத்தில் இந்த ரயில் கடந்து செல்லும். மேற்கு வங்கத்தில் 3வது ரயிலாகவும், தேசிய அளவில் 18வது ரயிலாகவும் இது இருக்கும். வாரத்தில் 6 நாட்கள் இயங்கக்கூடிய இந்த ரயிலானது … Read more

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்..!

பாஸ்போர்ட் கிடைத்ததை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். எம்.பி பதவியை இழந்த பின்னர் அரசு முத்திரை பதித்த தமது பாஸ்போர்ட்டை ராகுல்காந்தி  ஒப்படைத்தார். நேஷனல் ஹெரால்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால் ராகுல், சோனியா உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் உரிமத்தை வழங்க இயலாது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு … Read more

பாஜக முதலமைச்சர்கள்- துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜகவின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்டக்கூட்டம் நேற்றிரவு டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,  வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து குடிமக்களின் நலன்கள் குறித்து பாஜகவினருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல முக்கியமான கருத்துகளை  தெரிவித்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். Source link

பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களுடன் அத்துமீறி நுழைந்த டிரோனை சுட்டு வீழ்த்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்!

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த மூன்று கிலோ 200 கிராம் உயர்ரக ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் டிரோன் மூலமாக போதைப் பொருள் கடத்தலின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   Source link

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 9 ஆண்டுகள் நிறைவு..!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆண்டு சாதனைகளையும் பணிகளையும் விளக்கி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேச உள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையிலும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் மாநில பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள் என்று … Read more

மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு.. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பொத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனம் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் மூன்று இளைஞர்கள் பைக் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இன்னொரு வீட்டில் பைக் திருடும்போது சத்தம் கேட்டு உரிமையாளர் வந்ததும் பைக்கை விட்டு விட்டு தப்பியோடுவதும் … Read more

துருக்கியில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிபர் எர்டோகன்..!

துருக்கியில், அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். மே-14 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், நேற்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 69 வயதான அதிபர் தயீப் எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளை பெற்றதாவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமால் கிலிக்டரொலு 47.86 % வாக்குகளை பெற்றதாகவும் அந்நாட்டு … Read more

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12..!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட், என்.வி.எஸ் – 01 வழிகாட்டி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் நெருப்பை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட 19-ஆவது நிமிடத்தில் 2-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தரை, வான் மற்றும் கடல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 துல்லியமாக … Read more

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதிப்பு!

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். அணு ஆயுதங்களை அண்மையில் … Read more