நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் திடீர் அறிவிப்பு!

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. அதே போல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு … Read more

ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான தனுஷ்..முற்றும் மோதல்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்று தகவல்கள் வந்தன. இதுமட்டுமில்லாமல் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் பலபேர் பலவிதமான கருத்துக்களை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் பிரிந்தாலும் இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவர்களது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். குறிப்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முழுமூச்சாக இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். … Read more

மார்ச் 18 முதல் இலவச கேஸ்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இருந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது விலை மலை போல் ஏறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், உங்கள் வீடுகளுக்கு மார்ச் 18ஆம் தேதி முதல் இலவச கேஸ் வந்து சேரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு … Read more

கொரோனா பூஸ்டர் டோஸ்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி கொண்டே இருக்கும் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி டோஸ் 1, 2 என்பதை தாண்டி தற்போது பூஸ்டர் டோஸ் வரை வநதுவிட்டன. இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் டோசின் செயல் திறன் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பூஸ்டர் டோசின் செயல்திறன், ஒருவருக்கு தடுப்பூசி … Read more

ரஜினியிடம் இருக்கும் அந்த பழக்கம்..பல வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர். இவரது படங்கள் வெளியாகிறது என்றால் அன்று ரசிகர்களுக்கு திருவிழாதான். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாட படுகிறதோ அதேபோல் ரஜினியின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாடுவார்கள். மேலும் ரஜினியின் படங்கள் மாஸ் கமர்ஷியல் வகையை சார்ந்தே இருப்பதால் அனைத்து வகையான ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துவிடும். இந்நிலையில் தற்போது ரஜினியைப்பற்றி பலருக்கும் அறியாத ஒரு தகவல் … Read more

Instagram புதிய அப்டேட்: இனி Stories பிடித்திருந்தால் லைக்ஸுகளை பறக்கவிடலாம்!

மெட்டா நிறுவனத்தின் பிரபல புகைப்படம் பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்டுகள் இருந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘ Private Story Likes ’ என அழைக்கப்படுகிறது. பல கோடி பயனர்கள் உலாவும் தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மெட்டா வழங்கியுள்ளது. இச்சூழலில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும்போது, அது ஸ்டோரி … Read more

ஆம் ஆத்மி கட்சி பொய் சொல்கிறது: ராகுல் காந்தி சாடல்!

உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிற 20ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அரியணையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. ஆனால், அம்மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. பாஜகவை … Read more

"லன்ச்சுக்கு முழு டைனோசர்.. அப்படியே முழுங்கு".. அதிர வைத்த அந்தக் கால முதலை!

ஆஸ்திரேலியாவில் தொல்லியல் துறையினர் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது டைனோசரை கடையிகா சாப்பிட்ட ஒரு முதலை குறித்த கண்டுபிடிப்புதான் இது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் விநோதமான கண்டுபிடிப்பு இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முதலையின் படிமத்தில் வித்தியாசமான தகவல் அடங்கியுள்ளது. அதாவது டைனோசரை சாப்பிட்டதுமே அந்த முதலை இறந்து போய் விட்டதாம். முதலை – டைனோசர் இடையிலான தொடர்பு குறித்த முதல் வரலாற்று சாட்சி இதுதான் என்றும் ஆஸ்திரேலிய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் … Read more

''வேலைக்காக படுக்கையை பகிர மாட்டேனு ” உரக்க சொல்லுங்கள் – நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

திறமையையும், கடின உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் தான் casting couch-ஐ சந்தித்ததில்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன், தரமணி , வட சென்னை , மாஸ்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா. நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் … Read more

லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1991 – 1996 ஆம் ஆண்டு வரை பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றப் பத்திரிகை … Read more