அண்ணாமலை விவகாரம் | ஜெயகுமாருக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்து பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் அந்த பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்திருந்தார்.  அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இன்று பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், ஜெயக்குமாரின் பேச்சுக்கு … Read more

இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கே சொந்தமா? சர்ச்சையை கிளப்பிய பாஜக நிர்வாகி கைது!

காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம், போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை, தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் க்ரைம் போலீஸார் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் ஒரு போலி வீடியோவை பதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வெளிநாடு ஒன்றின் மசூதியில் … Read more

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை – அண்ணாமலைக்கு ஓபிஎஸ் பதிலடி! பரபரப்பு அறிக்கை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்த அவரின் அறிக்கையில், “அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு! ஓபிஎஸ் தரப்புக்கு நாள் குறித்த உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த, ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கு, வருகின்ற ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்மறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த வாரம் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அதிமுக தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதத்தை முன்வைத்தனர். … Read more

வெப்பத்தை தணிக்க வரும் ''மழை''… 26 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்…!

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 26 … Read more

நீட் தேர்வில் விலக்கு பெற அரசு போராடுகிறது.!! அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக மிக முக்கியமாக தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியோடு தேர்தலை சந்தித்தது. நீட் தேர்வு ரகசியம் தனக்குத் தெரியும் எனவும், அப்போதைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததால் நீட் தேர்வை அனுமதித்துள்ளதாக தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது விளையாட்டாக கூறியிருந்தார்.  அதன் பிறகு சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த … Read more

பாஜக மாநில செயலாளர் குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது..!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் நாராயணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக நிலம் 78 செண்ட் விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் இடைத்தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பதில் சில நடைமுறை சிக்கல் இருந்ததால் அதை தீர்த்து வைத்து இடத்தை விற்பனை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் … Read more

சேலம் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் உயிரிழப்பு.!!

சேலம் பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் உயிரிழப்பு.!! கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்து காரணமாக கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.  இந்த விபத்து நேரத்தில் கிடங்கில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா். இதுகுறித்து தகவலறிந்த … Read more

அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.. வகுப்புகள் எப்போது தொடக்கம்.?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகளில் இருக்கும் 1,07,299 இடங்களில் சேர்வதற்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு … Read more

கணவரின் குடிப்பழக்கம்… மனமுடைந்த இளம்பெண் விபரீத முடிவு… தூத்துக்குடியில் பரிதாபம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரின் குடிப்பழக்கத்தால் மன வேதனையடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜபொண்ணு. இவரது மனைவி விஜயலட்சுமி (20). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜ பொண்ணு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் ராஜபொண்ணு வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். … Read more