கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துவிட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

இலங்கையில் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு நேற்று (02) பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ் ராசமாணிக்கம் ஆகியோரும் இறுதி … Read more

உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Mr.Abdur rahim siddiqui உள்ளிட்ட உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றிணை நேற்று (02.07.2024) மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகைதந்து கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடிருந்தனர். இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகள், உணவு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள்,அரசாங்கத்தினால முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி சார்ந்த முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற … Read more

மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரசினைகளுக்கு தீர்வு காணும் முகமாக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இவ் களஜயத்தினை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரதேசமான, மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றினை நேற்று (02) மேற்கொண்டார். மாவட்டத்தின் எல்லையோர பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இதன் போது அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதுடன் மகாவலி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் … Read more

எதிர்கால சந்ததியினருக்காக ஆசிரியர் பணியில் இணையும் அனைவரும் அவர் தனது சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்

ஒழுக்கம் இல்லாமல் நாட்டின் கல்வியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – அதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்தில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு – 2,159 பேருக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை … Read more

தமிழ்த் தேசிய அரசியலில் தீர்க்கமான ஒருவராக இருந்தார்

முதிர்ந்த அரசியல்வாதியான பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும், விவேகமான மக்கள் பிரதிநிதியாகவும் பதித்துச் சென்ற தடம் மிகவும் பெறுமதியானதாகும். தமிழ்த் தேசிய அரசியலில் தீர்க்கமான ஒருவராக இருந்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ் மக்களின் பொதுத் தலைவராகவும் தான் சார்ந்த கொள்கைக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுபவராகவும் இருந்தார். … Read more

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில் வடக்கு மாகாண ஆளுநர்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா நேற்று நடைபெற்றது.  மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நேற்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது.    கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.    இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது.    திருவிழாவில் வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், … Read more

கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து மிகவும் மனவேதனையாக உள்ளது

இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கும் இரு தரப்பு கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக பிரான்ஸ் கம்பனி மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தரையாடல் வெற்றியளித்தமை தொடர்பாக எதிர்க்கட்சியினால் செய்யும் பிரச்சாரம் தொடர்பாக மிகவும் மனவேதனையாக உள்ளது என்றும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இணங்க சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகரிக்கப்பட்ட கடனுதவியின் கீழ் இந்த நாடு செயற்படுத்தப்படுகின்றது என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று … Read more

1000 மில். ரூபா செலவில் தெற்கிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்தி

பாணந்துறை முதல் கிரிந்த வரையுள்ள 18 கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக அரசாங்கத்திடமிருந்து 1000 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த 29ம் திகதி தென் மாகாணத்திலுள்ள கடற்றொழில் துறைமுகங்களுக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன் அத் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் பொருட்டு உரிய அமைச்சரவைப் பத்திரத்தைதயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் … Read more

மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழா : நினைவு தபால் முத்திரை வெளியீடு

மன்னார் மடுமாதாவின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை நேற்று (01.07.2024) வெளியீடு செய்யப்பட்டது. மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை மடு திருத்தலத்தில் வைத்து வௌியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மடு திருத்தலத்தின் … Read more