கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் புகையிரதத்தின் சாரதியின் கவனயீனம் தொடர்பாக முறையான விசாரணை

கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் 1019 புகையிரதத்தில் புகையிரத சாரதியின் கவனயீனத்தால் தற்போது அவரின் வேலை தடைசெய்து, திணைக்கள மட்டத்தில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத சேவை அறிவித்துள்ளது. இப் புகையிரதத்தின் சாரதி சுதுகும்பொல பிரதேசத்தில் புகையிரதத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்கியுள்ளார். அதன்போது பயணிகள் அவரை கயிறொன்றினால் கட்டி மீண்டும் புகையிரதத்தில் ஏற்றியதன் பின்னர் புகையிரதம் கண்டி நோக்கிச் செல்வதற்குப் புகையிரத உதவி சாரதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகையிரதம் கண்டியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும்

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிடரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,690 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 05 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,. அதன் புதிய விலை 1,452 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2.3 கிலோ … Read more

உழைக்கும் நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சிலும் குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன…

உழைக்கும் நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு அமைச்சிலும் சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடின உழைப்பே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணி புரியக்கூடிய கலாசாரத்தை உருவாக்கும் வகையில், கடினமாக உழைக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கான இளைஞர் … Read more

இசிப்பத்தன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்காக ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை ஒப்படைத்தல்

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஹென்றி பெட்ரிஸ் ( Henry Pedris Ground ) விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை இசிப்பத்தன கல்லூரிக்கு ஒப்படைப்பதன் மூலம் அதனை சரியான வகையில் மேம்படுத்திப் பேணிச் செல்வதுடன், அதன்மூலம் குறித்த கல்லூரி மற்றும் ஏனைய சுற்றியுள்ள பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது விளையாட்டுக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டுகின்றது. இது தொடர்பாக 01.07.2024 அன்று … Read more

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல்

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 01.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3,000 மழைநீர் … Read more

இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார்

இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் … Read more

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களைப பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல்

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள்ள தடைகளை நீக்குவதற்காக 02 பில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024.02.26 அன்று அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீண்டும் பலப்படுத்துவதற்காக கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 பில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீட்டில், 02 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி … Read more

475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

சுகாதார சேவையின் ஆளணி வளத்தை அதிகரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கிணங்க 475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தலைமையில் இந்நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் 25 புதிய வைத்தியர்களுக்கு உத்தியோகபூர்வமாக மட்டுப்படுத்தப்பட்ட … Read more

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அறுபது (60) வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவையைப் பாராட்டி கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்றது. மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்க, 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 … Read more

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பது வெறும் கனவாகவே அமையும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல … Read more