நாட்டின் பல பிரதேசங்களில்; பல தடவைகள் சிறிதளவு மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ … Read more

இ.பெ.கூ இன் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இ.பெ.கூ இன் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 344 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 379 ரூபாவாகும். மேலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், … Read more

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது

2025ஆம் ஆண்டு தரம் 1இற்கு புதிய மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான உரிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு ஒப்கடைக்க முடியும். மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை மாதம் 31 ஆம் திகதி என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம்  5.07% வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்தார்.   இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.   அதன்படி வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு இணங்க  2024.07.01 நள்ளிரவில் இருந்து பயணத்தில் ஈடுபடும் அனைத்து பஸ் சேவைகளினதும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் (02) இலங்கை போக்குவரத்து சபையினால் செலுத்தப்படும் பஸ்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்/ மாகாண … Read more

இலங்கையில் ஓவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 4 பேர் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

இலங்கையில் ஓவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 4 பேர் வபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும், நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் நாளொன்றிற்கு 32-35 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிரிதுங்க தெரிவித்தார். இன்று ஆரம்பமாகின்ற 09 ஆவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற விழிப்புணர்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

48 வது தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நாள் நிகழ்வு

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய 48 வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. இத்தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு துரையப்பா விளையாட்டு அரங்கில் 30.06.2024 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.க.மகேசன் அவர்கள் … Read more

ஆர் சம்பந்தனின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில்…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான திரு.ஆர்.சம்பந்தனின் பூதவுடல் நாளை புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாக முன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இறுதி மரியாதைக்காக வைக்கப்படுமென இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் பிரதமரின் பங்கேற்புடன் இக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மறைந்த திரு.ஆர்.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன … Read more

வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு , திறன் அபிவிருத்தி, … Read more

முதலாம் மரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது

2025ஆம் ஆண்டு தரம் 1இற்கு புதிய மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான உரிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு ஒப்கடைக்க முடியும். மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை மாதம் 31 ஆம் திகதி என்றும்; கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டு நலனுக்காக ஒன்றாக முன்னேறுவோம்

அனைவரையும் ஒன்றிணைத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பாடத்தை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் அரசியல் செய்யுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியாக நாட்டிற்காக பரந்துபட்ட பணிகளை நிறைவேற்றினேன். புதிய அரசியல் பயணம் மாத்தறையில் ஆரம்பமானது. இந்தப் புதிய அரசியல் பயணத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூணுவோம். இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி … Read more