இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றியளித்துள்ளது…

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் இடம்பெற்ற ஒபெக் நிதி அபிவிருத்தி அமர்வில், பரவலான மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் ஊடாக சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு இலங்கை எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்திதுவ நாடுகளுக்குத் தெளிவுபடுத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். நிலைபேறான அபிவிருத்திக்காக அத்தியவசியமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான திறனை மீளமைத்தல் என்பவற்றை இவ்வேலைத்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் … Read more

சகல மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு நாளை வேலைக்குச் செல்லுங்கள் – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள்

அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு நாளை (28) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பதில் கல்வி அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்… சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றி மாணவர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்கி … Read more

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையில் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றன. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தினை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்கான கலந்துரையாடல்கள் நேற்று (26) கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை … Read more

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கை வெளிநாட்டலுவல்கள் அரமச்சர் அலி சப்ரி ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் யோகோகமிகாவா வின் அழைப்பின் பேரில் இச்சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பயணத்தின் போது அமைச்சர் அலி சப்ரி;, ஜப்பான் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் இப்பயணத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் நேற்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் … Read more

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரம் – தொழில்நுட்பப் பிரிவுகனை ஒருங்கிணைப்போம்

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படும்- ஜனாதிபதி. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்து கடல்சார் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நிதி வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை கட்டமைப்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குள் தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தி மற்றும் … Read more

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு

பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று (25/06/2024) திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், … Read more

மக்கள் இறப்பை தவிர்க்க புரட்சிகரமான சவாலை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்

நாடு வீழ்ச்சியடையும் போது மக்கள் இறப்பதைத் தடுக்கும் புரட்சிகரமான சவாலை ஏற்றுக்கொண்டவர் ஜனாதிபதி ரணில் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கார கடந்த (23) அம்பாறையில் இடம்பெற்ற ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இளைஞர்களின் இலக்குகள் தவறான திசையில் திசைதிருப்பப்பட்டது இதனால் நாடு வீழ்ச்சியடைந்ததுடன், இளைஞர்கள் தமது ஆற்றலை சரியான திசையில் செலுத்தவில்லை என … Read more

“வெல்வோம் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடாத்தப்படும் “வெல்வோம் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இம்மாதம் 28,29 ஆம் (வெள்ளி, சனி) திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் ஊழியர்களை பதிவு செய்தல், B பத்திரங்களை வழங்குதல், பின்னுரித்தாளிகள் மாற்றம் செய்தல், ஓய்வுக்கு முன்னரான ஊழியர் சேமலாப நிதி மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், 30% மீளளிப்பு நலனுக்கான உரித்துடமையை பரீட்சித்தல், ஊசே.நிதியை … Read more

ஒன்பது வளைவுகள் பாலத்தைப் பார்க்க இனிப் பயப்படத் தேவையில்லை!

சுற்றுலாக் கவர்ச்சி மற்றும் ஊக்குவிக்கும் இடமான தெம்மோதரை ஒன்பது வளைவு பாலத்தில் காணப்பட்ட குளவிக் கூடுகளை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் அண்மையில் இடம்பெற்றன. இக்குளவிக் கூடுகளை பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் இடைக்கால தீர்வாகவும், பாதுகாப்பு வேலி அமைத்தல் என்பன தொண்டுச் சேவையாக கண்டி பிங்கு நண்பர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது. மத்திய கலாசார நிலையத்தின் மொனராகலை மாவட்ட வேலை திட்டத்தின் கீழ் தொல்பொருளியல் மற்றும் புகையிரத திணைக்களம் என்பவற்றின் மேற்பார்வையின் கீழ் எல்ல பிரதேச ‍செயலகம் மற்றும் எல்ல … Read more