அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 19,128 நபர்கள் பாதிப்பு

இலங்கையயைச் சுற்றி ஏற்பட்டு வரும் முன்கூட்டிய காலநிலை காரணமாக, கடந்த 24மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சியாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 212.5மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இம்மழை வீழ்ச்சியினால் பலத்த காற்றுடன் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் அனர்த்தம் ஏற்பபட்டுள்ளதனால் மாவட்டத்தில் 19,128நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப் பணிகளை பிரதேச செயலாளர்கள், அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் Elon Musk ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதிக்கு பாலி விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு. இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். இதன்போது விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் Luhut Binsar Pandjaitan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) Kura Kura Bali தீவிலுள்ள “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்திற்கான இலங்கையின் முன்னெடுப்பு (Tropical Belt Initiative), நீலப் பொருளாதாரம் (Blue Economy) கடற்பாசி தொழில் துறை குறித்து … Read more

தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும்…

• சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 20ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 மே 20ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என … Read more

ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

 ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிசார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி … Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் … Read more

1509 இராணுவத்தினர் தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழமையான மற்றும் தொண்டர் படையணியின் 114 அதிகாரிகள் மற்றும் 1,395 இதர நிலை சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு உயர்வு பெற்றுள்ளனர். போர் வீரர்களின் நினைவு தினமான இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து படைப்பிரிவு உறுப்பினர்களுக்கும் இந்த தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும்

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் … Read more

இன்னும் இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்கலாம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க, பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியத்தைப் பற்றி கற்றுக்கொடுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் மூலம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வெசாக் வலயங்களை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுபற்றிய கலந்துரையாடல் தொடரில் கொலன்னாவை கலந்துரையாடல் (2024.05.17) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு … Read more

பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் குசல் அணியுடன் இணைந்து கொள்வார் – அஸ்லி டி சில்வா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா விற்கு செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸின் விசா அனுமதிப்பத்திரம் அதன் தூதுவர் அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என  த் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா விரைவில் அவ்வனுமதி விசா கிடைத்துவிடும் என நம்புவதாகத் தெரிவித்தார். இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் விளையாட்டு வீரர்கள் ஏலம் போகும் … Read more