3146 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரங்களுக்கான பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை 

15 வது போர் வீரர்களின் தினத்தில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியின் அனுமதியுடன், கடற்படையின் வாயில் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படையின் சிரேஷ்ட மற்றும் கனிஷா விமானப் படை வீரர்கள் 3146 பேருக்கு அடுத்த தரங்களுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத மனிதாபிமான விசேட பங்களிப்பை வழங்கி நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்காக முப்படையின், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்கள் தமது உயிர்களை … Read more

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி சபாநாயகருடன் சந்திப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் அண்மையில் சபாநாயகர் மஹிந்தையா  அபிவர்த்தனவே பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தனர். உகண்டா கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சி முகாம் நடாத்துதல்உட்பட இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளுதல் போன்ற வசதிகளை திட்டமிடல் தொடர்பாக  சபாநாயகர் உடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 2024 ஜனவரி 3  முதல் 6 ஆம் திகதி வேலையை உகண்டாவில் இடம் பெற்ற  பொதுநல வாய அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் சபை முதல்வர்களின் … Read more

அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்…

• நாட்டின் பல பாகங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழை • சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  மே 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில … Read more

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது – AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் … Read more

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்-  பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார். அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி … Read more

'45 Under 45’ இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது 

45 Under 45′ சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது வழங்கும் நிகழ்வு (16) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.  குறுகிய காலத்தில் புதிய கண்டுபிடிப்பு முறைகளை பின்பற்றி வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்ற மற்றும் தமது திறமையினால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இளம் சுயதொழில்  முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் விசேட விருது வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.  இதன் போது இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் 56 … Read more

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்ட  பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க நடவடிக்கை…

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள்  பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இரத்தினபுரி மற்றும் கேகாலை  மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பட்டதாரிகள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட  தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளதாகவும் இந்த நிலையில் இம் மாவட்ட … Read more

எல்ல – வெல்லவாய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நாளை (17) காலை 6 மணி வரை இவ்வீதி தற்காலிகமாக மூடியிருக்கும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. மேலும், மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு … Read more

இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனினால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு பகுதி முதல் மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (16) காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கமநல சேவை திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து … Read more

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (16/05/2024) திறந்து வைத்தார். இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒதுக்கீட்டின் கீழ் 10 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்டது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை … Read more