டயானா கமகே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டமையால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்பாட்டு அறை குழு தீர்மானங்கள் – பிரதமர் அலுவலகம்

மாத்தளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற கட்டிடத்தின் நிர்மாண வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை… கண்டி மாநகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் காலம் டிசம்பர் 31 வரை நீடிப்பு… மாத்தளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற கட்டிட நிர்மாணப் பணிகளை உடனடியாக மீள ஆரம்பிக்க பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையிலான தேசிய தொழிற்பாட்டு அறை குழு தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து இடைநிறுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அரசுக்கு ஏற்படக்கூடிய நிதி இழப்பை … Read more

ரஷ்யா – உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் இலங்கை பிரஜைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு ஸ்தாபிப்பட்டுள்ளது

ரஷ்ய – உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்ய- உக்ரேன் போருக்குப் சம்பந்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112441146 … Read more

பொதுவான வானிலை முன்னறிவிப்பு..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  மே 10 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 09 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில … Read more

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் மாத்திரமே தொழிலுக்காகச் செல்ல வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி

திறந்த விசா அல்லது சுற்றுலா விசாவின் கீழ் வெளிநாட்டுத் தொழிலுக்கு செல்லுபடியாகும் உத்தியோகபூர்வ தொழில் ஒப்பந்தத்தின் கீழ் சட்ட ரீதியான முறையின் கீழ் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறில்லாது விடின் கஷ்டத்தில் விழ வேண்டியேற்படும் என நாட்டு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தவறான வழியில் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தேடுவதற்கு கஷ்டப் படும் போது அவர்களைப் பாதுகாப்பதற்கு … Read more

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 86 புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமாக 86 புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2023 டிசம்பர் 02ஆந் திகதி நடாத்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி பிரதேச மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 2100 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கிரம சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவினால் புதன்கிழமை (08) அலரி மாழிகையில் வைத்து வழங்கப்ட்டது. இதனடிப்படையில் … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவால்களை ஏற்று ஜனாதிபதி செயல்பட்டதால் இரண்டு வருடங்களில் நாடு ஸ்திரமடைந்துள்ளது

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க. நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களுக்குப் பயந்து ஓடாமல், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான அரசியல் தலைமைத்துவத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாகவும், எதிர்கால … Read more

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்ட மூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேலும், தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இம்மாதம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், … Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்..

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் நடாத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.