கடற்பரப்புகளில் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், … Read more

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை BMICH இல் நடைபெறும்

• நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்திற்கான முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் “Industry Green Awards” விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் -கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண. சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் … Read more

சுற்றுலா விசா கட்டணத்தை பழைய முறையிலேயே பேண அமைச்சரவை தீர்மானம்

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும். சுற்றுலாத் துறை நாட்டுக்குள் … Read more

தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் நிஷாந்த மானகேவினால் படைவீரர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் மே மாதம் ‘படைவீரர் நினைவு மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான … Read more

கலாநிதி கே. அருளானந்தன் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக கலாநிதி அருளானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்க கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (06.05.2024) அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது. நாரா நிறுவனத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வரும் கலாநிதி அருளானந்தன் சமுத்திவிரவியல் விஞ்ஞானத்தில் P.hd பட்டதாரியாவார். நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்னவும் கலந்து கொண்டார்.

சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – மீனவர்களின் உறவினர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து லொரென்சோ புத்தா-04 எனும் ஆழ்கடல் மீன்பிடிப்படகில் கடற்றொழில் மேற்கொள்வதற்காக புறப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் கடத்பட்டதுடன் இலங்கை அதிகாரிகள் துரிதமாக … Read more

சுதேச பாரம்பரிய வைத்தியர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஆர் சிறி கிரிஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (06) திகதி இடம் பெற்றது. இதன் போது மாவட்டத்தில் சுதேச பாரம்பரிய மருத்துவத்தினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், மூலிகை தோட்டம் அமைத்தல் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையால் மேற்கொண்டனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர … Read more

மனுஷவின் தலையீட்டினால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

ஹலம்பவெவ விவசாயியின் நான்கு நாள் உண்ணாவிரதம் அமைச்சர் மனுஷவின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது . வெலிஓயா ஹலெம்பவெவ விவசாயிகள் அமைப்பின் தலைவர் தண்ணீர் பிரச்சினை காரணமாக முன்னெடுத்து வந்த நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டுவர அவ் அமைப்பு கடந்த (04 ) அன்று இணக்கப்பாட்டிக்கு வந்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையில் கலந்து … Read more

மக்களுக்கு காணி உறுதி வழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானது

• உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம முன்னெடுக்கப்படவில்லை. • அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தலில் இணையுங்கள். • பொலன்னறுவையை இந்நாட்டி பிரதான ஏற்றுமதி மாவட்டமாக மாற்றியமைக்க முடியும். • இளைஞர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைக்க அனைவரும் ஒன்றுபடுவோம் – மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் … Read more