பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார். இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச … Read more

இலங்கை காலநிலை உச்சி மாநாடு 2024 கொழும்பில் ….

“இலங்கை வணிகங்களுக்கான காலநிலை அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் ” என்ற தொனிப்பொருளில்  இலங்கையின் முதலாவது காலநிலை உச்சி மாநாடு 2024 ஐ எதிர்வரும் மே 7  முதல் 9 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இலங்கை வர்த்தக  சம்மேளனம் நடாத்தவுள்ளது. காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அபாயங்கள் மற்றும் இலங்கை வணிகங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகள் குறித்த தேசிய உரையாடலுக்கான … Read more

பாராளுமன்றம் மே 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்

பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் ‘வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் குறித்த விவாதம் மே 07ஆம் திகதி பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. … Read more

முல்லைத்தீவுக்கு  SMART எதிர்காலம்!

முல்லைத்தீவுக்கு  SMART எதிர்காலம் மக்கள் நடமாடும் சேவையினை வழங்கிடும் நோ்க்கில் ” நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா” என்னும் தொனிப்பொருளில் நேற்று (03)  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின்  ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில்  சிறப்பாக நடைபெற்றது. மக்களுக்கு சேவை வழங்கிடும் நோக்கில் இந்த நிகழ்வு இன்றும் (04) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் மக்களுக்கு வழங்கிடும் சேவைகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் … Read more

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பிரச்சினையை பேசித் தீர்மானிப்பதாக கம்பனிகள் கூறுகின்ற போதிலும் அவ்வாறு அந்தக் கம்பனிகள் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். டொலர் பெறுமதி அதிகரிப்பால் பெருமளவில் இலாபமீட்டிய பெருந்தோட்ட கம்பனிகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்காமல் … Read more

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் முன்னெடுப்பு

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் (ISTRM) அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை தயாரிப்பதற்கான செயன்முறைக்கு பொதுமக்களின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், அதிகாரிகள், மகா சங்கத்தினர், அனுராதபுரம் மறை மாவட்ட பேராயர் மாஷல் அந்தாதி, அனுராதபுரம் முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி அப்துல் … Read more

சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே குறிந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் … Read more

நாட்டில் குறைந்த வருமானம் பெறும்  3.4 மில்லியன் குடும்பங்களுக்கு 26.6 பில்லியன் ரூபா அரிசி விநியோகம் …

ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க நாடு பூராகவும் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்கும் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.   நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்கள்  தகுதி பெற்றுள்ளதுடன் இதற்காக 26.6 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே ஜி விஜேஸ்ரீ தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரிசி விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக … Read more

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு யாழ் மண்டைதீவிற்கு வட மாகாண ஆளுநர் விஜயம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதிக்கு நேற்று முன்தினம் (01/05/2024) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.  கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் … Read more

கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் :

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்- எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் … Read more