தொழிலாளர் தினச் செய்தி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக ஒன்றிணைந்து உரிய திட்டமிடலுக்கூடாக பணியாற்ற வேண்டும். கடந்த பொருளாதார வீழ்ச்சியின் போது இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் தான் அதிகமான சவால்களை … Read more

மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் உதிரம், வியர்வை மற்றும் உயிர்த் தியாகங்கள் மீதான பயணத்தின் வரலாற்றுப் பதிவாக 138வது உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இம்முறை அதனை எமது தொழிற் சூழல்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் முக்கியமானதொரு தருணத்திலேயே கொண்டாடுகிறோம். எனினும் எத்தகைய உடன்படிக்கைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. உழைக்கும் மக்களுடனான உரையாடல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தொழிற்சூழலை முடிவு செய்கிறோம். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட … Read more

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) கொட்டகலை பிரதேச சபை  பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விசேட விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்தீரமான பொருளாதாரத்தை கட்டுயெழுப்ப அமைச்சரவை பக்கபலமாக இருந்தது. அதேபோல் நாடு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் கூடுதலாக … Read more

கிழக்கு மாகாணத்தில் “உருமய” உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய  “உருமய” காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் குறித்து கிழக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  விதமாக கிழக்கு மாகாணத்தின் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (30) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளின் சகல உரிமைகளையும் பெற்ற மக்களுக்கு நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் “உறுமய”  காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய … Read more

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்! – அமைச்சர் டக்ளஸ்

உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர – சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் மே தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலகெங்கும் விரவிக் கிடந்த தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தகர்க்க – உரத்த நியாயங்கள் வெல்ல, அனைத்து மக்களும் … Read more

அரசாங்கம் என்ற வகையில் அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்க்கின்றோம்

ஒரு அரசாங்கமாக, அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்க்கும் அதே வேளையில், குழந்தைகள் மற்றும் அனைத்து மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழ்வதற்கும், வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு உள்ள உரிமையை மதித்து, ஒவ்வொரு மனிதனும் கண்ணியமான மரணத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையில் செயற்படும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை தானும் தனது குழுவும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் … Read more

நாடளாவிய ரீதியில் இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைக்கத் திட்டம்

வெளிநாட்டு சந்தையில் இலங்கை இளநீருக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நாடளாவிய ரீதியில் 85இற்கும் அதிகமான இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் இளநீருக்கு ஏற்பட்டுள்ள கேள்விக்கு அமைய நாட்டில் இளநீர் செய்கையினை முன்னேற்றுவதற்கு விவசாய அமைத்து விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதனால் இளநீர் உற்பத்தியாளர்கள் பயனடைவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் … Read more

இந்திய கடன் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் மறுசீரமைப்பு

குறித்த கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செலவையும் நிதியுதவியாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஏற்புடைய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 29.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 03. காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யும் கருத்திட்டம் இந்திய கடன் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2017.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி … Read more

சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடை

சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடையை அமைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடையை அமைப்பதற்காக பொருத்தமான இயக்குநர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக் கோரலை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (29.04.2023) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட் தீர்மானம் பின்வருமாறு. 05. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடை … Read more

ஜனாதிபதி நாளை இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் இடம்பெறவுள்ளது. மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். இதன் … Read more