நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 024 ஏப்ரல்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து … Read more

நாட்டைக் கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ தயாரில்லை

கட்டியெழுப்பப்படும் பொருளாதாரத்தின் பலன்கள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் 2024 வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெலிமடை … Read more

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட பின்னர் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இச்சந்திப்பில் மல்வத்து பீட அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரரரும் கலந்து கொண்டதுடன் அவர் … Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்றது. கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது நேற்று (21) நாடளாவிய ரீதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மொத்தமாக 34146 குடும்பங்களுக்கு இந்த இலவச … Read more

‘வசத் சிரிய – 2024’ போட்டிகளில் பங்கேற்க பெருமளவானோர் விண்ணப்பம்

ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ள ‘வசத் சிரிய – 2024’ சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கைகோர்த்து வருகின்றனர். புத்தாண்டு அழகன் மற்றும் அழகி, மரதன் ஓட்டம் மற்றும் மிதிவண்டி சவாரி ஆகிய போட்டிகளுக்காக பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் இருந்து தூர பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்க முன்வந்துள்ளமை விசேட … Read more

உத்தியோகபூர்வ விவகாரங்களில் முத்திரை பயன்படுத்தும் நடைமுறை நீக்கப்பட வேண்டும்… – பிரதமர் தினேஷ் குணவர்தன.

மஹரகம, பிரகதிபுரவில் 21.04.2024 அன்று இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்- இன்று ஆரம்பிக்கப்படும் இந்த மானியத் திட்டத்தினூடாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பல்வேறு பிரச்சினைகளால் அவதியுறும் குறைந்த வருமானம் பெறுவோருக்கும், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் … Read more

உலக பூமி தினம் இன்று

உலகம் பூராகவும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக பூமி தினம், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை “பூமி மற்றும் பிளாஸ்டிக்” எனும் தொனிப்பொருளில் 2040ஆம் ஆண்டளவில் பிளாஸ்டிக் பாவனையை 60வீதத்தினால் குறைப்பதை நோக்காகக் கொண்டு இம்முறை சர்வதேச பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்கா உட்பட 196 இற்கும் அதிகமான உலக நாடுகள் இப்பூமி தினத்தை அனுஷ்டிக்கின்றன. சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை, அழகு மிக்க பூமியின் … Read more

மட்டக்களப்பில் “அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம்” 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 தொடர்பான தரவரிசைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் இன்று (22) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இம்முன்னாயத்த தரவரிசைப் படுத்தல் குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு அணிகள், விபரக்குறிப்பு, நிபந்தனைகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் போது அணிகளுக்கான தரவரிசை இலக்கங்கள் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டன. அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 … Read more

இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடல்…

இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளபப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். அப்பதிவில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இதன்போது இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது. அத்துடன், நீர்த்துறையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமையும் … Read more

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நுவரெலியாவில் திறப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் இன்று (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆணையாளர் ஜீ. பிரதீப் சப்புத்தந்திரி தெரிவித்தார். இதுவரை காலமும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் கண்டியில் சிறிய அலுவலகமாக இயங்கி வந்தது. இவ்வலுவலகம் நுவரெலியா நகரில் இலக்கம் 95/26ஏ, லேடி மெகலம் வீதி, ஹாலியெல என்ற புதிய முகவரிக்கு இடமாற்றப்படவுள்ளது. இங்கு சாதாரண சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விரைவில் ஒரு நாள் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் … Read more