பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் முறைப்பாடுகளுக்கிணங்க ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் … Read more

மார்ச் மாத ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ்

மார்ச் மாதத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. இந்த மாதத்தின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை வீரர் இவர் ஆவார். அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரின் செயல்திறனைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயசம யுனயசை மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயவவ ர்நசெல ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இடம்பெற்று முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் … Read more

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக” சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை – 2024″ , கரைச்சி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுர்த்தி சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக கரைச்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவினரால் குறித்த சமுர்த்தி அபிமானி புத்தாண்டு விற்பனைச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது உணவு பண்டங்கள், பாதணிகள், … Read more

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மலைநாட்டு கலை மையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் (07) காலை … Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இல்லை

• அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றிய குழு கையாள்கிறது – அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. அரசாங்க திட்டங்கள், கிராமங்களுடனான ஒருங்கிணைப்பிற்கு உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை அமைப்பு. ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை … Read more

சூரிய கிரகணத்தை  இலங்கையில் பார்க்க முடியாது

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். இலங்கை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது. இது இஸ்ரோ அமைப்பின் தவறு இல்லை. … Read more

மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்  – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித நிவாரண வேலைத் திட்டத்திலும் பங்குபற்றாத நபர்களை உள்ளடக்கியதாகவும் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மிகிந்தலை, விளச்சிய, நாச்சியாதுவ உட்பட பல பிரதேசங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதற்கிணங்க தற்போது அஸ்வெசும பெறும் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கும், … Read more

பொலன்னறுவையில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மாவட்ட மட்டத்தில் பால் தயாரிக்கும் மத்திய நிலையத்தை நிருமாணிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பிரதேசத்திற்கான பால் தயாரிக்கும் 6 மத்திய நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்;கை எடுத்துள்ளதுடன் அதன் மூன்றாம் நிலையம் திறக்கும் வைபவம் அண்மையில்  இடம்பெற்றது. தமன்கடுவ பிரதேசத்தின் 8000 பால் உற்பத்தியாளர்களின் … Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்தேன்

• கட்சியை பிளவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் வெறுப்பு மட்டுமே உள்ளது. • அன்றும் இன்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்காகும் – கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன் … Read more

மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும். தெரிவு … Read more