வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியாக 1,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது

• சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வீதம் வழங்குவதாக கூறுவோர் அதற்காக பணம் தேடும் விதத்தையைும் கூற வேண்டும். • 2018 ஆண்டு வரையில் காணப்பட்ட அனைத்து சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக் கணக்குகளுக்கும் 12 வீத விசேட வட்டி வழங்கப்பட்டது – ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் … Read more

“துன்ஹிந்த  ஒடிசி” சொகுசுச் சுற்றுலாப் புகையிரதப் பயணம் ஆரம்பம்  

கொழும்பு – பதுளை புகையிரதப் பாதை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பயணத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு “ துன்ஹிந்த   ஒடிசி சொகுசு சுற்றுலாப் புகையிரதம்” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல பரகுணவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்றது. கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற பல்சமய ஆசிர்வாத நிகழ்வுகளின் பின்னர் காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த புகையிரதம் பதுளை வரை பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட … Read more

ஏனைய வருடங்களை விட டெங்கு பாதிப்பும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது – சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல

ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும் இன்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா … Read more

நவீன தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்

• அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறை புதிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் – கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு. அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா … Read more

அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்திய சாதகமான சூழல் காரணமாக இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற எதிர்பார்க்கிறோம்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை … Read more

தேசிய எண்ணெய் தேய்த்தல் விழா ஏப்ரல் 15 ஆம் திகதி வத்தளை ஹெந்தல புராண ரஜமஹா விகாரையில்!

ஏப்ரல் 18 ‘முருங்கை தினம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி. தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். … Read more

'கொரிய மற்றும் இலங்கை பிரதமர்கள் சந்திப்பில் புதிய துறைகளில் கொரிய வேலைவாய்ப்புகள்.'

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (2024.04.04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என கொரிய பிரதமர் இதன்போது தெரிவித்தார். விவசாயம், நிர்மாணத்துறை மற்றும் வேறு கைத்தொழில் துறைகளில் தனது நாட்டில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிற்படைக்கு மேலதிகமாக, சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கொரியப் … Read more

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகேகுச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்தார். உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணி நேரத்திற்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.

“Dunhinda Odyssey'' புதிய ரயில் சேவை இன்று முதல்…

புகையிரத சேவைக்கு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (05) முதல் “Dunhinda Odyssey” என்ற விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சொகுசு சுற்றுலா புகையிரதம் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு பதுளை நோக்கி புறப்படும் என்றும், சுற்றுலாப் … Read more

மக்கள் நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரசாங்க அதிகாரிகளையும் சார்ந்துள்ளது 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உறுமய, அஸ்வெசும மற்றும் மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி … Read more