தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்; அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம், இம்முறையும் புத்தாண்டின்; இரண்டு வாரங்கள் விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை தயாரித்துள்ளது என்று அதன் பிரதானி எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, இன்று (05) முதல் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் … Read more

ICCயின் மார்ச் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டார்

மார்ச் மாதத்திற்கான ICC துடுப்பாட்ட வீரர் விருதுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட் வீரர் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரில் கமிதுவின் அபார துடுப்பாட்டமே அதற்கு காரணம். கமிந்து மெண்டிஸைத் தவிர, அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆகியோர் மார்ச் மாதத்திற்கான துடுப்பாட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். முடிவடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 367 ஓட்டங்களை … Read more

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று (05) காலியில் ஆரம்பமாகும்

இலங்கை – அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (05)இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 7ஆம் திகதியும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி 9ஆம் திகதியும் காலி சர்வதேச … Read more

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு லெபனான் புறப்பட்டுச் சென்றது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் (மார்ச் 09) முதல் கட்டமாக ஐ.நா பணிக்காக சென்ற 12 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 15வது SLFPC இன் முன்கூட்டிய குழுவை தொடர்ந்து இந்த குழு அங்கு சென்றுள்ளது … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான … Read more

பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்….

தென் கொரிய மக்கள் குடியரசின் கியோங்சங்புக்-டு (Gyeongsangbuk-du) மாகாண ஆளுநர் லீ சியோல் வூ அவர்கள் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2024.04.03 அன்று கியோங்சங்புக்-டு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி, விவசாயம், கடற்றொழில், பெண்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பெருமளவு உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன், மேலும் பல திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்கல்வி பெறாமல் பாடசாலைலை விலகிச் செல்லும் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான தகவல் … Read more

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 469 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 02 அதிகாலை நோரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கொண்டு வந்து போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு லொறி வண்டி (01) கைப்பற்றியுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல … Read more

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024.04.20ஆம் திகதி முதல் 2024.05.20ஆம் திகதி வரையான ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மேலும், ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை சட்ட ரீதியில் விளகிக்கொல்வதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 2. இந்த பொது மன்னிப்பானது 2024.04.02ஆம் … Read more

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியீடு

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டதுடன் அதன் பணிக்குழுவினருக்கான பாராட்டு சான்றிதழ்களும் வைக்கப்பட்டன. நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் நேற்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்படும் வரலாற்று நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணிக்குழுவின் … Read more

யாழ்ப்பாணப் படையினர் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிப்பு

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் மனித நலனில் அக்கறை காட்டி வரணி பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். புதிய வீடுகள் 02 ஏப்ரல் 2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. திறப்பு விழாவின் போது, வீட்டு சாவிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தலையைக தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் குடும்பங்களுக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டன. மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாண … Read more