தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான பாராளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்தும் முதலாவது நிகழ்வு
பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் பற்றிய விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதம நூலகர் சியாத் அஹமட், பிரதிப் பிரதான உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.ஷஹீட், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யஸ்ரி மொஹமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். … Read more