தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளுக்கான மொத்த விலை கவனத்திற்கொள்ள வேண்டிய விதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கலாம். கடந்த காலங்களில் நிலவிய அதிகரித்த உச்ச விலையில் காணப்பட்ட காய்கறிகள், பொதுவாக    முருங்கைக்காய், கரட் மற்றும் கறிமிளகாய், கோவா, போஞ்சி மற்றும் ஏனைய மரக்கறிகள்  கிலோவொன்றிற்கான  மொத்த விலை 300 ரூபாவையும் விடக் குறைவான விலையில்  அவதானிக்கலாம். முருங்கைக்காய் கிலோவொன்று 900 தொடக்கம் 1000 ரூபா  வரையிலும், கரட் 320 ரூபாவிற்கும், கறிமிளகாய் 400ரூபவாகவும்,    போஞ்சி 280 … Read more

கொக்கட்டிச்சோலை மக்களுக்கு இராணுவத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கிவைப்பு!!

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தனவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மாகாணத்தில் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு, வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமேந்து இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் … Read more

கேகாலை, வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்

கேகாலை, வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான கௌரவ சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளரும் பாராளுமன்ற சபை முதல்வரின் செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன, … Read more

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையம் இலங்கை ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறுவதற்கான சான்றாகும்.

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை (2024.03.12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக முக்கியமான நிகழ்வு இதுவெனவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வரலாற்று மையமாக இலங்கை விளங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், எமது நாட்டின் மிகப்பெரும் நன்மை அதன் மூலோபாய அமைவிடமாகும் எனக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் … Read more

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon Mahapannaporn), பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் (H.E. Major General (R) Faheem Ul Aziz, HI (M)), ஆகியோரே இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார். வௌிவிவகார அமைச்சர் … Read more

வீட்டுதோட்ட விளைச்சல் வேலைத் திட்டத்திற்காக 231 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார். அதற்காக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 232 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், … Read more

சவால்களுக்கு ஈடுகொடுத்து, கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் எதிர்காலச் சந்ததியை கட்டியெழுப்பும் கல்வி முறைமை நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நன்றியும் கூறினார். கொழும்பு … Read more

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார்

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ அண்மையில் (06) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இலங்கை – தென்கொரிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேகர, பிரதித் தலைவர் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார் மற்றும் பொருளாளர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோரும் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் … Read more

காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது…

காலாவதியான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்றைய தினம் (13) உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கான பொது இணையப் பக்கத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக மருந்துகளை கொள்வனவு செய்வதில் விசேட கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்த … Read more

இலங்கை கோள்மண்டலம் இன்று (13) முதல் மீளத் திறப்பு

இலங்கை கோள்மண்டலம் உலகளாவிய புரொஜெக்டர் பராமரிப்பு திருத்தப்பணிகளின் பின்னர் மக்கள் பார்வையிடுவதற்காக  இன்று(13) முதல் மீள திறக்கப்படவுள்ளது. அதற்கிணங்க, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு பாடசாலை மாணவர்கள் கோள்மண்டலத்தை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பொதுமக்களும் பார்வையிடலாம். இதேவேளை திருத்தப்பணிகளுக்காக கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு http://www.planetarium.gov.lk/home/ என்ற இணையத்தளத்தைப்  பார்வையிடலாம்.