ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் பிராந்தியப் பணிப்பாளர் சபாநாயகரை சந்தித்தார்

ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா பசிபிக் மற்றும் அமெரிக்காப் பிராந்தியப் பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கைப் பணிப்பாளர் சஞ்சே விக்னராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கை பாராளுமன்றத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தினால் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம்

அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் – ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எட்டுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது. … Read more

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று  (10) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. காணிகளுக்கான உரிமங்களை கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோரால் யாழ்ப்பாணம் … Read more

ஜனாதிபதி ‘IORA’ தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

‘எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்’ எனும் தொனிப்பொருளில் நேற்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ‘IORA’ தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியம் எனப்படும் IORA சங்கம்1997 இல் நிறுவப்பட்டு, இந்த ஆண்டு அதன் 27 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சதுப்புநில சுற்றுச்சூழலை மீளமைப்பதற்கான முன்முயற்சிகளுக்காக கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் முக்கிய மறுசீரமைப்பு விருது இலங்கைக்கு … Read more

சிலரின் பிடியில் ஐக்கிய மக்கள் சக்தி இருப்பதால் அங்கு ஐ.தே.கவின் கொள்கைகள் இல்லை!

• நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுங்கள். • ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களுக்கு உண்மையையே கூறியது. • ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் இருந்தது. • இக்கட்டான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்தினோம் – முதலாவது ஐ.தே.க பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் மகளிர் தின நிகழ்வு!

கிழக்கு   “Worlds Most Powerful Woman” விருது சுசித்ரா எல்ல அவர்களுக்கு வழங்கி வைப்பு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.   ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.    … Read more

சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது

இலங்கை சதொச நிறுவனம் நேற்று (08) முதல் சில அத்தியாவசிய பொருட்கள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பால் மா, செத்தல் மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.  1060 ரூபாவாக இருந்த லங்கா சதொச பால் மாவின் விலை 125 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாகும். ஒரு கிலோ செத்தல் மிளகாய் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,175 ரூபாவாகும்.  ஒரு கிலோ … Read more

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு அதிபர் களவிஜயம்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கல்லடியில் பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு திடீர் களவிஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கடந்த காலங்களில் உபயோகத்தில் இருந்து தற்போது பாவனையற்று இருக்கும் அரச விடுதியை நேற்று (09) திகதி பார்வையிட்டுள்ளார்.   பாளடைந்து பற்றைக் காடாக காணப்படும் அரச விடுதியினை பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் துப்பரவு செய்ய மாவட்ட அரசாங்க அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.    … Read more

நாட்டின் பல பாகங்களிலும் பிரதானமாக வரட்சியான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும்- சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார். நிதி அமைச்சில் (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், அதன் பிரதிபலன்களை காண முடிந்துள்ளதாகவும் பீட்டர் ப்ரூவர் … Read more