அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் 100 கல்வி வலயங்களுக்குக் கீழ் வரும் 7, 902 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.08மில்லியன் தொகையான சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக “பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி”த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், ஒரு மாணவருக்காக ஒரு நாளைக்கு ஒரு உணவுக்காக 85/- ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தையில் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளின் அதிகரிப்பிற்கிணங்க ஒரு உணவிற்காக குறைந்தது 110/- பெறுமதியான நிதி செலவிடப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. … Read more

இலங்கையின் “உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டம் ” (CTUR) தொடர்பில் ஆராய்வு

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச “உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்” வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டு விசேட கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றன. அவற்றில் ஒரு கலந்துரையாடல் ஹிமாலயன் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல நிபுணத்துவ அறிவுள்ள பல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. அடுத்த கலந்துரையாடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் … Read more

இரண்டாண்டுகால ஜனாதிபதியின் வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எவ்வாறு அவதானித்தார்கள்

• “Press Vs. Prez” நூல் வெளியீடு மார்ச் 07 ஆம் திகதி. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறும் கடினமான பணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முக்கியமான வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எப்படி நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Press Vs. Prez” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெறும். ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை (7) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை தொடர்பான முக்கியமான நிதி விவகாரங்களை நிவர்த்தி செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். எதிர்வரும் விஜயத்தை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இல்லத்தரசிகளை  எக்காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் – பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்  இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

ஒவ்வொரு சேவையை போன்று தமது வீட்டில் சகல வேலைகளையும் முன்னெடுக்கும் இல்லத்தரசிகளை எந்த காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் எட்டாம் திகதி கொண்டாடப்படவுள்ள  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அது தொடர்பாகத் தெளிவு படுத்துவதற்காக நேற்று அரசாங்க தகவல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் … Read more

திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு! 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் (04.03.2024) சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் / சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவைங் வழங்கினார். க்க கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதிமுதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்ச்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.   பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.  இதேவேளை, எதிர்வரும் 08ஆம் … Read more

மேல் மாகாணத்தில் 200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்துக்கு உட்படுத்துவேன் – அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்காலத்தில் நவீண வசதிகளுடன் கூடிய 200 இலத்திரணியல் பஸ்களை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுவையில்.. மேல் மாகாணத்தில் இந்த நவவீண வசதியுடன் கூடிய 200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்து சேவைக்கு உட்படுத்துவேன். அதன் முதற்கட்டமாக தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 பஸ்களை … Read more

மீன்பிடித்துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் இடையே சந்திப்பு

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பெக்டேட் நேற்று (04) மீன்பிடித் துறை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.  இக்கலந்துரையாடலில் மீன்பிடித்துறை அமைச்சினால் மேற்கொள்வதற்கு எதிர்பாார்க்கப்படும் புதிய மீன்பிடிச் சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அது, எமது மீன்பிடி சமூகம் சர்வதேச மட்டத்திற்குத் தரமுயர்த்துவதற்காக சர்வதேச சட்டவிதிகளுக்கு இணங்க தயாரிக்கப்படுவதாக அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.   பிரதான மீன்பிடித் துறைமுகங்கள் பலவற்றை அபிவிருத்தி செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது ட்ரான்ஸ்லட் தூதுவருடன் … Read more

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்!

வலய / மாகாண கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் விசேட சுற்றறிக்கை. ஜனாதிபதி நிதிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெறலாம். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025″இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மற்றும் … Read more

ஆனந்த – நாளந்த 94வது கிரிக்கெட் மாபெரும் சமர் போட்டியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற ஆனந்த மற்றும் நாளந்த கல்லூரிகளுக்கு இடையிலான 94 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமர் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் (03) பார்வையிட்டார். மறைந்த கலாநிதி என். எம். பெரேரா ஞாபகார்த்த சவால் கிண்ணத்திற்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி இவ்வருடம் பிரமாண்டமாக நடைபெற்று வருவதுடன் அதன் இறுதி நாள் இன்றாகும். மாணவர்களை உற்சாகப்படுத்த விளையாட்டுப் போட்டியைக் காணச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டுப் போட்டியைக் காண வந்த … Read more