வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை ஜனநாயக நாட்டின் வலிப்பு நோய்க்கான வைத்தியசாலை மற்றும் சுகாதார மத்திய நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கண்காணிப்பு மற்றும் அதன்பிற்பாடான செயற்பாடு, அபிவிருத்திகளுக்காக சவூதி அரேபியாவின் நிதியுதவியின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர். இந்நபர்கள் கடந்த சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் சந்தித்து குறித்த திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடினர். வலிப்பு நோய் … Read more

புதிய பொருளாதாரத்திற்கான புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்படும்

கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு மேலும் 62 சட்டங்கள் சமர்ப்பிக்கப்படும். நாட்டை அபிவிருத்தி செய்ய உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய சட்டங்கள் அவசியம். பொதுவான நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுவான கடன் முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்படும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கும் புதிய சட்டங்கள். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பாராளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது. மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது … Read more

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03.03.2024) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை … Read more

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு பங்களாதேஷின் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க டி சில்வா போட்டியின் முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகளில் விளையாட மாட்டார். பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக இலங்கை – பங்களாதேஷ்; இடையிலான இருபதுக்கு 20 ஒருநாள் … Read more

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (3) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி … Read more

பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம்

• நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில். • இளையோரை விவசாயத்தில் ஈடுபடுத்த “ஸ்மார்ட் எக்ரிகல்சர்” அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் … Read more

பிஜி தீவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த பிஜி தீவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் கலவெடி வோடோ ராவோ (Kalaveti Vodo Ravu) அவர்கள் 2024.02.21 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பிஜி அமைச்சர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் … Read more

தாய்லாந்துக் குழுவின் நிதி அன்பளிப்பை “கண்ணீரைத் துடைப்போம்” திட்டத்துக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர். இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி நிதியம் முன்னெடுத்துள்ள “கண்ணீரைத் துடைப்போம்” வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்தார். இந்தக் குழு இலங்கையின் நலன்புரிச் செயற்பாடுகளுக்காக மூன்றாவது முறையாக இவ்வாறான அன்பளிப்பை … Read more

அரச தொழிற்சாலைகள் இரண்டில் உற்பத்தி செய்யப்படும் உரம் தேயிலை தொழில்துறையினருக்கு சந்தை விலையை விட குறைவாக வழங்கப்படும்

“Agri tech-24 விவசாய தொழில்நுட்ப அறிவு” கண்காட்சி நாளை ஹம்பாந்தோட்டை படஅத விவசாய தொழில்நுட்ப பூங்காவில் – விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர. அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு … Read more

ரொனி டி மெல் உடனான எனது அனுபவம் எனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது

ஜே.ஆர்.ஜயவர்தன – ரொனி டி மெல் இணக்கப்பாட்டுடன் கொண்டுவந்த திறந்தப் பொருளாதார கொள்கை நாட்டை முன்னேற்றியது – ரொனி டி மெலுக்கு இறுதிக்கிரியை நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. திறமையான அரசியல்வாதியும் சிறந்தப் பொருளாதார நிபுணருமான முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், தனது தற்கால அரசியல் செயற்பாடுகளுக்கு உக்கமளிப்பதாக அமைந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சரியானத் தீர்மானங்களை எடுத்து அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி முடிவுகளைப் பெறுவதே ரொனி டி மெல்லின் இயல்பாகும். … Read more