வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடி விடாது தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆய்வு!!

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தேசிய கடதாசி சங்கத்தினை 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை கடந்த (20) ஆம் திகதி தேசிய பொருளாதார மற்றும் உள்ளக திட்டமிடல் தொடர்பான மேற்பார்வை குழுவின் … Read more

மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தானியங்கிப் பொறிமுறை மற்றும் இணையத்தளம்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதற்கான இறுதிக்கட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கிணங்க மார்ச் நான்காம் திகதி முதல் நாடு பூராகவும் உள்ள மோட்டார் வாகானப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் சகல சேவை பெருநர்களுக்கு வினைத்திறனான உடனடி சேவைகளை வழங்குவதற்காக முன்கூட்டியே தினமும் நேரமும் பெறக்கூடியதாக தானியங்கி அழைப்புப் பொறிமுறையொன்று மற்றும் இணையத்தளம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக (29) அறிவித்தார். இதன் ஊடாக … Read more

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஆளுநர் செயலாளர் எல். பி. மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம்

இலங்கை கடல் பிராந்தியம் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கடற்படையைச் சார்ந்துள்ளது. செங்கடலின் பாதுகாப்புக்கு முயற்சிகளுக்கு ஒத்துழைத்து இந்நாட்டு துறைமுகங்களின் பெறுமதியைப் பாதுகாக்க வேண்டும் – இலங்கைக் கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு ‘ஜனாதிபதி வர்ணங்கள்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் … Read more

பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து.

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப்பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது. சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார். இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் … Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – அமைச்சர் ஜீவன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ. சந்தோஷ் ஜா அவர்களுக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்; ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், பொருளாதார, சமூகம் மற்றும் அபிவிருத்தி சார் விடயங்கள் பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கிவரும் அபிவிருத்திசார் பங்களிப்புக்காகவும், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்காகவும், இதன்போது அமைச்சர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றிருக்கும் தேசபந்து தென்னகோன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார். நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியைச் சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். அதனையடுத்து புதிய பொலிஸ்மா அதிபர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.

ஜனாதிபதி வில்கமுவ மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வில்கமுவ பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகளை நேற்று(29) நேரடியாக மேற்பார்வைச் செய்தார். “அஸ்வெசும” வேலைத் திட்டம் தொடர்பாக வில்கமுவ பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்திலிருந்த மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். அங்கிருந்த ஆசிரியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் வளப் பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார். இதன்போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் … Read more

“அஸ்வெசும” பெறத் தகுதியுடைய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும்

” அஸ்வெசும” மற்றும் ” உறுமய” திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரச அதிகாரிகளின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி. அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி முன்னிலையில் அறிவிப்பு. “அஸ்வெசும” பயனாளிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய்ந்தார்.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக … Read more

இலங்கையர்களுக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது . இதற்கானத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (28) ஜப்பான் கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார். இவ் வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் … Read more