சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மக்கள் தமது பிள்ளைகளையும் குடும்பங்களையும் இழக்கச் செய்யும் பொய்யான மற்றும் பிழையான பிரசாரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை தடுக்க … Read more

'சிறுவர் பாதுகாப்பு சட்டம்' எனும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பான அமைச்சரவைத் … Read more

பாடசாலை மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் பயிற்சி

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதை நோக்காக கொண்ட இப்பயிற்சி பாசறை கடந்த இரண்டு நாட்களாக இடம் பெற்றது. மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி நெறி தன்னாமுனை மியானி உள்ளக கூடைப்பந்தாட்ட அரங்கில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எந்திரி பார்த்தசாரதி தலைமையில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம் பெற்றது. மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தேசிய கூடைப்பந்தாட்ட சம்ளேனம் ஆகியன இணைந்து … Read more

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும்  Grand..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 140 பேருக்கு LDO Permit உம், 10 பேருக்கு Grand உம் நேற்று (19) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச … Read more

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்தில் ஆரம்பம்

விநியோகத்திற்காக பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நிறைவு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த். கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார். … Read more

வெலிசராவில் இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாநாடு

இலங்கை இராணுவப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 16) வெலிசரவில் உள்ள அலை ஏரி கடற்படை மண்டபத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பிள் (ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டார். அன்றைய நிகழ்வுகள் மங்கல விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டதுடன், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் … Read more

“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்! ஒரே நாளில் 1300 வீடுகளுக்கு அடிக்கல்!

மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பங்காற்றும் – ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்த எதிர்பார்க்கும் முன்மொழிவுகளை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக … Read more

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும், தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களுடன்  விசேட கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார். அத்துடன் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி அமைச்சர் ரமேஷ் பத்திரணவிற்கு கௌரவமும் அளிக்கப்பட்டது. இதன்போது இராஜாங்க … Read more

அரச சேவைகள் தொடர்பான விசேட ஒரு நாள் நடமாடும் சேவை

மஹரகம பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அரச சேவைகள் தொடர்பான விசேட ஒரு நாள் நடமாடும் சேவை நிகழ்ச்சி (17) ருக்மல்கமவில் இடம்பெற்றது. இதன்போது அஸ்வெசும திட்ட அதிகாரிகளிடம் தமது பிரச்சினைகளை முன்வைக்க வந்த பொதுமக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நேற்று (17) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் வரவேற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டச்செயலக மாநாட்டுமண்டபத்தில் ஏற்பாடாகியிருந்த உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர். இலங்கை இந்திய நட்புறவிறவின் கீழ் இந்திய அரசினால் வழங்கப்பட்ட இவ் உலருணவுப்பொதிகள் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பகல் … Read more