யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண … Read more

உலகளவில் கொரோனா தொற்று – 48,71 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48,71 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 கோடியே 71 இலட்சத்து 62 ஆயிரத்து … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,233 ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. … Read more

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2,050 … Read more

Applications are invited from the children of Estate workers

Applications are invited from the children of Estate workers  Applications are invited from the children of estate workers, for award of scholarships by the Ceylon Estate Workers’ Education Trust (CEWET).   These scholarships are available for G.C.E. Advanced Level, Undergraduate courses and for students undergoing Vocational/Technical education in any other Government Technical Colleges in Sri Lanka. 2.     … Read more

இன்றும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு மாகாணத்தையும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களையும் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் … Read more

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். 5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு நேற்று(30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குருநாகல் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் கொபெய்கனே மீகஸ்வௌ பிரதேசத்தில் உள்ள குளத்தின் புனரமைப்பு பணிகள் கௌரவ பிரதமரினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் … Read more

பிம்ஸ்டெக் மாநாட்டில் ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய உரை

பிம்ஸ்டெக் மாநாட்டில் ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள்  மாநாட்டின் வரவேற்பு உரையும் நாட்டிற்காக ஆற்றிய உரையும்(30.03.2022)  “பிம்ஸ்டெக் – ஒரு நெகிழ்ச்சியான பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களுக்காக” கௌரவ அரச தலைவர்களே, பிரதிநிதிகளே, அதிதிகளே, முதன்முறையாக இணையத்தின் ஊடாக நடைபெறும் 5ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக  உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், உங்களின் கெளரவமான பங்கேற்பிற்கு நான் நன்றி தெரிவிப்பதோடு, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய கடுமையாக உழைத்த பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர், செயலக … Read more

78 இலட்சத்து 04 ஆயிரத்து 499 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

தொற்றுநோயியல் பிரிவு  அறிக்கையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை(27)  கொவிட்  தடுப்பூசிகள்  4 ஆயிரத்து 125 பேருக்கு  வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1 கோடியே 70 இலட்சத்து 6 ஆயிரத்து 94 பேர் முதல் டோஸையும்,1 கோடியே 44 இலட்சத்து 13 ஆயிரத்து 773 பேர் இரண்டாவது டோஸையும்,78 இலட்சத்து 04 ஆயிரத்து 499 பேர் பூஸ்டர் டோஸையும் பெற்றுள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை(27) 2 ஆயிரத்து 779 பேருக்கு பூஸ்டர் டோஸ்  வழங்கப்பட்டுள்ளது  .கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) பைசரின் முதல் டோஸை 379 பேருக்கும், இரண்டாவது டோஸை 758 பேருக்கும்  வழங்கப்பட்டது. மேலும் சினோபார்மின்  முதல் டோஸை 21 பேரும், இரண்டாவது டோஸை 188 பேரும்  பெற்றுள்ளனர் . இது வரையில் மொத்தமாக பைசரின் முதல் டோஸ்  25 இலட்சத்து 14 ஆயிரத்து 565 பேருக்கும், இரண்டாவது டோஸ் 8 இலட்சத்து 78 ஆயிரத்து 554 பேருக்கும்  வழங்கப்பட்டுள்ளன.சினோபார்மின் முதல் டோஸை 1 கோடியே 20 இலட்சத்து 47 ஆயிரத்து 987 பேரும், இரண்டாவது டோஸை 1 கோடியே 11 இலட்சத்து 73 ஆயிரத்து 453 பேரும் மொத்தமாக பெற்றுள்ளனர்.அஸ்ட்ராசெனிக்காவின்  முதல் டோஸ் 14 இலட்சத்து 79 ஆயிரத்து 631 பேருக்கும், இரண்டாவது  டோஸ் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 593 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.8 இலட்சத்து 04 ஆயிரத்து 801 பேர் மொடோனா தடுப்பூசியின் முதல் டோஸையும்,7 இலட்சத்து 87 ஆயிரத்து 361 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை  1 இலட்சத்து 59 ஆயிரத்து 110 பேர் முதல் டோஸையும், 1 இலட்சத்து 55 ஆயிரத்து 812 பேர் இரண்டாவது டோஸையும் இது வரையில் மொத்தமாக பெற்றுள்ளனர்.