டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஒக்டோபர் 11 முதல் ஆரம்பம்

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  (05) நடைபெற்ற … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்; 100 மி.மீ அளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவு பலத்த … Read more

“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள்

“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள் 2023 ஒற்றோபர் 04 ஆம் திகதி சபாநயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட இரண்டு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் கௌரவ சபாநாயகர் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகக் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (06) சபையில் அறிவித்தார்.

பெருந்தோட்ட மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிப்பு…

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுக விழாவும், சின்னம் வெளியீடும் நேற்று (05.10.2023) நடைபெற்றது. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற … Read more

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும்

உலகில் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பத்தாயிரம் மடங்கு வேகமாக உயிர் பல்வகைத்தன்மையை இழக்கப்படுகிறது. மனித குலம் உள்ளடங்களாக இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து உயிரினங்களும் இருப்பு தொடர்பான நெருக்கடிக்கும் முகம்கொடுத்துள்ளன. ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும் இரண்டாம் நிலைக்குத் … Read more

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்றுவருகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டிகள் நேற்று (05) நிறைவடைந்த நிலையில், இலங்கை ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என 4 பதக்கங்களை வென்றுள்ளது. தடகளத்திற்கு மேலதிகமாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது, இதனால் இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் 21 வருடங்களின் பின்னர் இலங்கை … Read more

தானிய இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம் –  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில், கிராமியப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தை மையமாக வைத்து வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை, எதிர்காலத்தில் நாடு பூராகவும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற … Read more

மீன்பிடி படகுகளுக்கு 2ம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்

சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான கடற்றொழிலாளர்களுக்கு இரு கட்டங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன. 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் 29,057 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்குஇவ்வாறு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில் கடற்றொழில் அமைச்சர் … Read more

சர்வதேச ஆசிரியர் தினச் செய்தி

தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இந்நாட்டின் ஆசிரிய சமூகம் சாதகமான பங்கை ஆற்றி வருகின்றது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் தியாகம் செய்து பெருந்தொகையான மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்களைத் திறக்க அவர்கள் செய்து வரும் பணியை நான் நன்றியுடன் பாராட்டுகிறேன். நான் கல்வி அமைச்சராக இருந்த போது இந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு சலுகைகள் பலவற்றை என்னால் வழங்க முடிந்தது. , தரப்படுத்தப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் ஆசிரியர் கலாசலைகளை நிறுவுவதற்கும் அரசியல் அதிகாரத்தின் … Read more

ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் – 2023

2023 ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இம்முறை கொழுப்பில் இடம்பெறவுள்ளது. “ஆசிய பாராளுமன்றங்களில் பாலின சமத்துவத்தின் சமமான பிரவேசத்தை ஏற்படுத்தல் மற்றும் பல்வகைத்தன்மை” எனும் தொனிப்பொருளில் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, இந்த ஒன்றுகூடல் மற்றும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஒக்டோபர் 09 முதல் 11 வரை இடம்பெறும். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஒக்டோபர் 09 ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. … Read more