2023 அரச சேவை கிரிக்கெட் போட்டி 25 ஆம் திகதி ஆரம்பமாகும்;

இலங்கை அரச சேவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள, 2023ஆம் ஆண்டுக்கான அரச சேவை கடின பந்து கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரச சேவை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கமல் புஷ;பகுமார தெரிவித்தார். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (21) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரச சேவை கிரிக்கெட் … Read more

பிரதமரின் தொடர் ஒத்துழைப்பு, இலங்கை -ஈரான் இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவியளித்தன – ஈரான் தூதுவர்

இலங்கையின் தூதுவராக தனது சேவைக் காலம் முடிவடைந்து செல்லும் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசதே “ஈரான் – இலங்கை இரு தரப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இராஜதந்திர பதவிக் காலத்தில் தொடர் ஒத்துழைப்பை வழங்கியமை” தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார். கொரோனா தொற்று மற்றும் உலக பொருளாதார நெருக்கடியில் சவால் மிக்க காலப்பகுதியில் வெளிநாட்டமைச்சராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் வழங்கிய ஒத்துழைப்புக்களை பாராட்டும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற போது பிரதமரை சந்தித்த தூதுவர் … Read more

இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பல்வேறு துறைசார் உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம். கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவொன்றை விரைவில் நிறுவுமாறு ஈரான் ஜனாதிபதி பரிந்துரை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் (Seyyed Ebrahim Raisi) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல … Read more

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கு நிதியளித்தல் தொடர்பான மாநாட்டிலியே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை அடிப்படையாக கொண்டு, காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய உலக பொருளாதாரத்திற்கான நியாயமானதும் துரிதமானதுமான மாற்றத்திற்காக உலகளாவிய கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான மைல்கல்லாக ஐ.நா பொதுச்செயலாளரால் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. விரைவில் அமுல்படுத்தப்படக்கூடிய … Read more

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம்

அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி சிறப்புரை. நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஆற்றிய சிறப்புரையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். “யாரையும் கைவிடாத உலகில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு” எனும் தொனிப்பொருளில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த … Read more

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று (20) இடம்பெற்றது. இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கடந்த வருடம் ருவண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை நிதியளித்தல் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்கள் குறித்தும் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவ இடையில் சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ. நா சபையின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்றது. இலங்கையின் நிதித்துறை சீ்ர்த்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் … Read more

அறுகம்பை சுற்றுலாத் திட்டம் விரைவில்

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்தி அப்பகுதியிலிருந்து சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அறுகம்பை பகுதியை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போது அறியப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் … Read more

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி அகியோருக்கிடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளித்தமை தொடர்பில் பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ … Read more

ஒரு கிலோ 12 கிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னார் பகுதியில் கைது..

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான ஹொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதை பொருளும் திங்கட்கிழமை(18) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபால வின் பணிபுறைக்கு அமைவாக உதவி … Read more