இலங்கை அரசாங்கத்திற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக்கூறினார். அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் … Read more

நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும்

நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப் பாதைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் – சாகல ரத்நாயக்கவிடமிருந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில், அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை, இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் … Read more

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கத் திட்டம்

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டு, அந்த வீதிகளின் நிர்மாணப் பணிகள் துரிதமாகப் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் இதனைத் தெரிவித்தார். இங்கு … Read more

அமெரிக்க – இலங்கை வர்த்தகம்,முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14ஆவது கவுன்சில் கூட்டம் கொழும்பில்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான (TIFA) 14 ஆவது கவுன்சில் கூட்டம் நேற்று (18) கொழும்பில் நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்கவும் அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கவின் ஜ.நாவுக்கான பதில் உதவி வர்த்தகப் பிரதிநிதியான பிரெண்டன் லிஞ்ச் (Mr. Brendan Lynch, Acting Assistant United States Trade Representative for South and Central Asia) … Read more

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு

இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு. இலங்கை இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் தென் கொரியாவில் பல புதிய வேலை வாய்ப்புகள். காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம். இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய … Read more

பாராளுமன்றத்தின் புதிய பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாராளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பதவிச் சத்தியம் செய்தைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார். புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (19) மு.ப 9.30 … Read more

கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்திலிருந்து சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் நிதி உதவி

கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்ப அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய மற்றும் இடைநிலை சுயதொழில் முயற்சியாளர்களுக்காக அவர்களின் கைத்தொழில் அபிவிருத்திக்காக தலா ஒருவருக்கு 5இலட்சம் ரூபாய் வரையான அதிக பட்ச கடன் நிதியை தெரிவுசெய்யப்பட்ட 25பேருக்கு வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தலைமையில் கைத்தொழில் அமைச்சில் நேற்று (18) இடம்பெற்றது. ஆறு வீத வருடாந்த வட்டி … Read more

மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றின் பிரதான கணக்கீட்டு அலுவரினால் செய்யப்பட்ட ஒரு தீர்மானம் மூலம் சிரமப்படுபவர்கள் அத்தகைய தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கூடிய குழு 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்படவுள்ள மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவாகும். அதற்கமைய, கணக்காய்வு, சட்டம் மற்றும் அரசாங்க நிதி முகாமைத்துவம், பொது நிர்வாகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அனுபவமுடையவர்களுக்கு … Read more

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

“இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்” வட்டமேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று (18) ஆரம்பமான “நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023” இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்துகொண்டார். 2030 ஆம் ஆண்டளவில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான … Read more

பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து 50 இலட்சம் ரூபா நிதியுதவி

இலங்கை கிரிக்கெட்டில் பிரபல ‘ஊக்குவிப்பாளராக’ இருந்த பேர்சி அபேசேகரவுக்கு 5 மில்லியன் ரூபாவை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிர்வாக சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ‘ஒரு போட்டியை ஊக்குவிப்பவராக இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்;கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது. அவர் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் தூணாகத் திகழ்ந்தார். அவரது நலம் குறித்து அறிந்து கொள்வதற்கு இதுவே எமக்குக் கிடைத்த … Read more