நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு உலக வங்கி முழுமையான ஆதரவு

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும். இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் கல்வித்துறை ஊக்குவிப்புக்கும் ஆதரவு – உலக வங்கியின் தலைவர் தெரிவிப்பு. பொருளாதார நெருக்கடியின் போது உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) … Read more

உலகளாவிய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளினால் கூடுதல் பங்களிக்க முடியும்

“G77 + சீனா” அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல். உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கியூபாவின் ஹவானா நகரில் (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் … Read more

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்

கியூபாவில் நடைபெற்ற “ஜி77 + சீனா” அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி நேற்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார். “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” … Read more

தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு – ஒக்டோபர் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கையில்

தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும்அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறும். இந்த மாநாடு கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையினால் நடத்தப்பட இருப்பதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட … Read more

தாய், சேய் ஆரோக்கியத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை..

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாராட்டப்படும் இலங்கையில், தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழிநுட்பத்தை, அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் சுகாதார சேவையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், இது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச வளவாளர்களைக் கொண்ட முதற்கட்ட செய்தியாளர் மாநாடு அண்மையில் (15) கொழும்பு 03 movenpick ஹோட்டலில் நடைபெற்றது. கனேடிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சர்வதேச … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகள் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் (16/09/2023) சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலைப் பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீடீர் பணிப்புரை – கிளிநொச்சியில் இடம்பெறும் மண் கடத்தலை கட்டுப்படுத்த தூரித நடவடிக்கை மேற்கொள்ளும் துறைசார் தரப்பினர் .. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இரண்டு வார காலத்திற்குள் மணல் அகழ்வுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்ரைய தினம் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைய மணல் கடத்தல் இடம்பெறுவதாக இனம் காணப்பட்ட பகுதிகளுக்கு கள … Read more

ஜே.ஆர் ஜயவர்தனவின் சமூக, பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு -ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தின நிகழ்வு செய்தியில் ஜனாதிபதி

தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர் ஜயவர்தன சிறந்த முன்னுதாரணம் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்க தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி நினைவு கூரப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் அனுப்பவும் – பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக கடந்த யூன் 08 ஆம் திகதி அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் … Read more

100வருடங்களை விடப் பழமை வாய்ந்த யடியந்தோட்டை – கராகொட பாலத்தை புனரமைக்க நடவடிக்கை

100 வருடங்களை விடப் பழமையான யடியந்தோட்டை – கராகொட பாலத்தை நவீனமயப்படுத்திப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் இந்நிகழ்;ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக 360 மில்லியன் ரூபா நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் சப்ரகமுவ மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது இராஜாங்க அமைச்சர்களான ஸ்ரீபால கம்லத், ரஞ்சித் சியம்பலாபிடிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.