அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளை வரவழைப்பதற்குத் திட்டம்

மருந்துப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக் நாட்டிற்கு வரவழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக (26) ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இது குறித்து ஊடகவியளாலர்களுடனான விசேட சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்காக சாதாரணமாக 6 மாத காலம் எடுக்கும் எனவும் அவசர கொள்வனவை … Read more

கடற்படையின் ஆதரவில் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சி

கடற்படையின் ஆதரவில் பாடசாலை மாணவர்களுக்கான பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக பாடசாலை மாணவர்களுக்காக பியகம, தரணகம ஆரம்பப் பிரிவு வித்தியாலயத்தில் பல் மருத்துவ முகாம் மற்றும் பற்சுகாதாரம் தொடர்பாக விழிப்பூணர்வூட்டும் நிகழ்ச்சி கடற்படைப் பணிப்பாளர் கொமாண்டர் நந்தனி விஜேதோருவின் மேற்பார்வையில் ( 27) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அதற்கிணங்க, கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டம் … Read more

இந்திய மற்றம் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து நாட்டின் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடு தொடர்பான கலந்துடையாடல்

மின்சக்தி மற்றும் எரி சக்தி துறையுடன் சம்பந்தமாக கடந்த இந்திய சுற்றுலாவின் போது கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மின்சார சபை, சூரிய எரி சக்தி அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை நன்கொடை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மெட்ரிக் தொன் சிலோன் தேயிலையை கையளித்தது. இந்த சிலோன் தேயிலை நன்கொடையை கொழும்பில் உள்ள மியன்மார் தூதுவர் ஹான் து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியிடமிருந்து 2023 ஜூலை 27ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பெற்றுக்கொண்டார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் இந்த அடையாளத்திற்காக மியன்மார் அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்த தூதுவர் … Read more

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளை தெளிவுபடுத்த நடவடிக்கை

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடு அவசியம். இதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்- அமைச்சர் அலி சப்ரி.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் … Read more

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே எனது நோக்கம்

மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாயின் தற்போதுள்ள குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். தனக்கு யோசனைகளை முன்வைக்க மட்டுமே முடியும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான புதிய – சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது … Read more

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை உடனடியாகவும் முறையாகவும் வழங்க உள்ளூராட்சி மன்றங்கள் தயார்

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான அனைத்து வீதிகளையும் வரைபடமாக்கத் திட்டம் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர. 2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார். 36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய … Read more

நடைமுறை சாத்தியமான சிந்தனையாளனை இழந்து விட்டோம் – அமைச்சர் டக்ளஸ் 

அச்சுவேலி “லாலா சோப்” தொழிலக ஸ்தாபகர் பொன்னு வன்னியசிங்கம் உயிரிழப்புச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அவலங்களையும் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் எமது சமூகத்தில் வாழ்ந்தவர்களில் லாலா ஐயா என்று வாஞ்சையுடன் எம்மால் அழைக்கப்பட்ட அமரர் வன்னியசிங்கம் அவர்களும் முக்கியமானவர். காலத்தின் தேவையுணர்ந்து நடைமுறைச் சாத்தியமான வழியில் சிந்தித்து, அதன் வழியிலேயே தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளையும், ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுத்த ஒருவரை எமது சமூகம் இன்று இழந்துள்ளது. அந்த வகையில், 90 களின் இறுதிப் பகுதியில் … Read more

திருகோணமலை மாவட்ட மக்களின் ஜீவனோபாயத்தை உயர்த்தி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கம்

திருகோணமலை மாவட்ட மக்களின் ஜீவனோபாயத்தை உயர்த்தி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே தனது நோக்கம் என புதிய அரசாங்க அதிபராகத் தனது கடமைகளை பொறுப்பேற்ற சமிந்த ஹெட்டிஆராச்சி தெரிவித்தார். இலங்கை நிருவாக சேவையில் விசேட தர அதிகாரியான சமிந்த ஹெட்டிஆராச்சி திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நேற்று (27) தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தார். “கடந்த ஆறு வருடங்கள் திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரிந்ததால் மாவட்டம் தொடர்பாக ஓரளவு புரிதல் எனக்குக் காணப்படுகிறது. அத்துடன் சில அதிகாரிகள் அப்போது என்னுடன் … Read more

தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் (26) செயலக வளாகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மதுஷிகனையும் அவரது பெற்றோரையும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பாண்டு வாத்திய இசை முழங்க மலர்மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.   … Read more