க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும்

பிம்ஸ்டெக் வலயத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்திச் செய்ய ஒன்றுபட்டு செயற்படுவோம் – இந்திய சுற்றுலாச் சம்மேளன நிகழ்வில் ஜனாதிபதி உரை. ஜுலை 16 முதல் சென்னை – யாழ்ப்பாண விமானச் சேவை இடம்பெறும்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே.அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் … Read more

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வுகாண நடவடிக்கை

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள்,மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மருந்துகள் கொள்முதல் செயல்முறை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர், சுகாதார … Read more

நமது நாட்டில் திரவப் பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கத்தின் முறையான வேலைத்திட்டம்

நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கால்நடை … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ரி 20 போட்டி ஆரம்பம்

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இன்று (8) கொழும்பு பீ. சாரா ஓவல் மைதானத்தில் ரி 20 போட்டி ஆரம்பமாகவுள்ளது. ரி 20 இப்போட்டிக்கு இலங்கை பெண்கள் அணியிலிருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜீலை 12ஆம் திகதி வரை 3 போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மகளிர் அணியானது குறிப்பிட்ட ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து அணிக்கு எதிராக ஆடவுள்ளதுடன், அணி உறுப்பினர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை. அத்துடன் குறிப்பிட்ட இவ் … Read more

சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் 

இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். இந்நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் தற்போதுள்ள சுற்றறிக்கைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் … Read more

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குழு கோரும் போது தகவல்களை வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நேற்று (06) எழுத்து மூலம் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதோடு அதன் பிரதிகள் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் … Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் நீர் வழங்கல் துறையின் நடவடிக்கையை முன்னெடுப்போம் – அமைச்சர் ஜீவன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்போம் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (வுயமயகரஅi மயனழழெ) ஆகியோருக்கும் இடையில் இன்று முன்தினம் … Read more

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவர் – பிரதமர் 

மஹரகம நகரசபையில் நடைபெற்ற மதிப்பீட்டு வரிகள் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் (05)  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரியைச் செலுத்த முடியும், மேலும் எதிர்காலத்தில், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை எளிதாகவும் திறமையாகவும் வழங்குவதற்கு ஏனைய பொது சேவைகளையும் இவ்வாறு தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது முக்கியம். மஹரகமவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் … Read more

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தகவல்கள் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மற்றும் ஏனையவர்களின் தகவல்களை எந்தவொரு தரப்பினருக்கும் வழங்குவதை முற்றாக நிறுத்துமாறு அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… ‘கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் தொழிற்பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை பாடசாலை அமைப்பில் மேற்கொள்ள முடியும். ஏனைய சங்கங்களுக்கு தகவல்களைப் பெற முடியாது. அடுத்த வாரம் … Read more