பாராளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது

▪️ ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு ஜூன் 21ஆம் திகதி ▪️ பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதம் ஜூன் 21ஆம் திகதி ▪️ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூன் 22ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (07) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான பாராளுமன்ற அமர்வு … Read more

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (16.06.2023) நடைபெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நூற்றாண்டுச் சின்னத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “2013 ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் … Read more

சர்வதேசப் பாடசாலைகளைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் கல்வி அமைச்சில் ஒரு விசேட பிரிவை அமைக்க நடவடிக்கை..

இலங்கையில் தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்கவும் முன்மொழிவு சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது புலப்பட்டது. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2023.06.08 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 7342 பேருக்கு ஆசிரியர் நியமனம்

ஆங்கில மொழியை தேசிய மொழியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை. 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையே அரசாங்கத்தின் நோக்காகும் -ஜனாதிபதி தெரிவிப்பு.அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். … Read more

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – ஊர்காவற்றுறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக நேற்று (15.06.2023) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்ந்த போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, … Read more

நனோ யூரியா உரம் பயன்பாடு காரணமாக பரிந்துரைக்கப்பட்ட யூரியா உர அளவை 25% – 50% வரை குறைத்துக்கொள்ள முடியும் – உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது

இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தினால் நனோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விருத்தி செய்யப்பட்டுள்ள நனோ யூரியா எனப்படு ‘HA – Urea’ பெயரிலான உரத்தைப் பயன்படுத்துவதனால் பரிந்துரைக்கப்பட்ட யூரியா உர அளவை 25% – 50% வரை குறைத்துக்கொள்ள முடியும் எனவும், விளைச்சலை 10% அதிகரிக்க முடியும் எனவும் நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிருவனம் (RRDI) மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது. உணவுப் … Read more

பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிபுணர் கெவின் டிவொக்ஸ் சபாநாயகரைச் சந்தித்தார்

முன்னாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிபுணருமான கெவின் டிவொக்ஸ், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்றையதினம் (14) பாராளுமன்றத்தில் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, ஐக்கிய நாடுகள் … Read more

வாகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்ற நடமாடும் சேவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க   கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்குமாகாண சுகாதார சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் பொதுமக்களுக்கான சேவையினை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் ஜி. அருணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்மந்தனாவெளி கிராம … Read more

காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதியை இணைக்கும் புதிய லங்கம பஸ் சேவை

காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதியை இணைக்கும் வகையில் புதிய லங்கம பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் மொரட்டுவ மற்றும் இரத்மலானை டிப்போக்களிலிருந்து காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதிகளை இணைக்கும் வகையில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் வசதிக்காக இரத்மலானை புகையிரத நிலையத்தில் இருந்து மஹரகம மற்றும் கல்கிஸ்ஸ, பொருபன, வேரஹெர, கொட்டாவ ஆகிய பகுதிகளுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பித்து … Read more

மட்டக்களப்பில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை வழங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (15) நடைபெற்றது. இவ்விழிப்புணர்வூட்டல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் விழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றது. மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இணைந்து எற்பாடு செய்த இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் … Read more