கொவிட்-19 மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு

மாகாண மட்டத்திலும் 09 உப குழுக்களை நியமிக்க நடவடிக்கை நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். 2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன் படி, அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் … Read more

ஊடக வெளியீடு

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் … Read more

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின் அதிகபட்ச பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்

இலங்கையின் தனித்துவமான சமையல் கலையை ஊக்குவிப்பதற்கு அரச அனுசரணை. சமையல் கலை மற்றும் சமையல் கற்கைகளுக்கு தனியான பாடசாலை- ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப … Read more

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு இணங்க தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா தலைமையிலான குழுவினரும் தென்கொரிய முதலீட்டாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது . இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள வளங்களை தென் கொரிய முதலிட்டாளர்கள் அறிந்து கொள்ளுவதற்கான முன்னளிக்கை மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. … Read more

மட்டக்களப்பில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, மட்டக்களப்பு, சித்தாண்டியில் 4 வது கெமுனு ஹேவா படையணியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8.6 ஏக்கர் காணியை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கிழக்குப் பாதுகாப்புப்படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் விடுவிக்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அரச அதிகாரிகளை அந்த இடத்திற்கு வரவழைத்ததன் பின்னர், காணியின் அளவு … Read more

இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து பிரான்ஸ் தூதுவருடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 08) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பேக்டெட் அவர்கள் இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 1948ஆம் ஆண்டு தொடக்கம் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்ட கால இராஜதந்திர … Read more

இலங்கை மற்றும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்படும்

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ் அவர்கள் (ஜூன் 09) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சுக்கு வருகை தந்த சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் பிராங்கோயிஸ் ஆகியோரிக்கிடையில் … Read more

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் ஜூன் 08 தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில், புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மங்கள விளக்கேற்றி சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் தனது புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும். இந் … Read more

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துக – சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் … Read more

கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280 மில்லியன் ரூபாய் – கோபா குழுவில் புலப்பட்டது

• வாகனத்தரிப்பிட கட்டணத்தை அறவிடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட 38 தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய நிலுவை 265.50 மில்லியன் ரூபாய் • கொழும்பு நகரில் தீயணைப்புப் பிரிவு மற்றும் விமானப்படை என்பவற்றுடனான ஒருங்கிணைப்பை அதிகரிப்பது தொடர்பில் கவனம் • விளம்பர வருமானங்களை முறையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் • காணி ஆவணங்களை முறையாகப் பேணாமை தொடர்பில் கவனம்• மேல்மாகாண மாநகர சபை அலுவலகத்தில் முறைகேடான கண்காணிப்பு முறை தொடர்பில் கவனம் கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் … Read more