பொசன் வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம். மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம். குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே … Read more

பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்ட குஷானீ ரோஹணதீரவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நேரில் சந்தித்து வாழ்த்து

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி குஷானீ ரோஹணதீர அவர்களைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்தித்த அமெரிக்கத் தூதுவர், பாராளுமன்றத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்ததுடன், நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு எப்பொழுதும் பாராளுமன்றம் தமது உதவியை நம்பலாம் என்றும் உறுதியளித்தார். பாராளுமன்றத்தின் வகிபாகம் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு குழுக்கள் செயற்படுவதாகவும் நட்பு ரீதியாக நடைபெற்ற இச்சந்திப்பில் … Read more

ஐ. நா வெசாக் தின நிகழ்வில் பிரதமர் திணேஷ் குணவர்தன விசேட உரை…

வெசாக் தினத்திற்கான சர்வதேச பேரவையின் தலைவர், சர்வதேச பெளத்த பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தாய்லாந்தின் உச்ச சங்க சபையின் உறுப்பினர்,சங்கைக்குரிய பேராசிரியர் பிரா பிரம்ம பண்டிட் அவர்களே, மகா சூலா-லாங்-கோர்ன்- பல்கலைக்கழகத்தின் முதல்வர் சங்கைக்குரிய பேராசிரியர் பிரா தாம்-வஜ்ர-பண்டிட் அவர்களே, சியாம் நிகாயவின் அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய வரக்காகொட ஞான-ரத்ன மகாநாயக்க தேரர் அவர்களே, மேலும் இலங்கையைச் சேர்ந்த சங்கைக்குரிய அனுநாயக்க தேரர்ளே, சங்கைக்குரிய சங்க ராஜ தேரர்களே, மற்றும் சங்கைக்குரிய மகா சங்கத்தினர்களே, ஐக்கிய … Read more

வெளிச்செல்லும் மற்றும் புதிய பிரித்தானிய உயர் ஸ்தானிகரால ஆலோசகர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் வெளிச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளிட்டன் மற்றும் புதிய இராணுவ ஆலோசகரான கேணல் டேரன் வூட்ஸ் ஆகியோர் கடந்த 1ஆம் திகதி பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், தனது பதவிக்காலத்தில் இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு … Read more

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கத் திட்டம்

உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது … Read more

பாராளுமன்றம் ஜூன் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை வரை கூடுகிறது…

• சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 7ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய ஜூன் 7 புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப … Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 ஜூன் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும,; காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழை வீழ்ச்சி … Read more

தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. தேசிய சேமிப்பு வங்கியானது பொருளாதார கட்டமைப்பிற்குள் அதன் செயற்திறன் மற்றும் சமூக ,சுற்றுச்சூழல் துறைகளுடனான அதன் உறவை பிரதிபலிக்கும் வகையில் “எங்கள் பலத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளுடன் அதன் ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையை … Read more

இலங்கையின் முதலாவது உருளைக்கிழங்கு சீவல் உற்பத்தித் தொழிற்சாலை

அரச துறையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உருளைக் கிழங்கு சீவல் தயாரிக்கும் உற்பத்தித் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது வெற்றியடைந்துள்ளன.   விவசாய அமைச்சின் சிறியளவிலான விவசாயக் கைத்தொழிலில் பங்கேற்பதற்கான (எஸ்பிபி) திட்டம் மற்றும் பண்டாரவெள கஹந்தேவெல விவசாய மக்கள் சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பண்டாரவெள கஹந்தேவெலயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உருளைக்கிழங்கு சீவல் தொழிற்சாலையின் உற்பத்திகளை ஆராய்வு  செய்ததில் தற்போது வெற்றி கிடைத்துள்ளதாகவும், விவசாய மக்கள் சங்கத்தினால் நேற்று முன்தினம்  (31) விவசாய … Read more

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்யலாம் – கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (01) மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையேற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதன் மூலம் மாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை மேற்கொண்டு … Read more