உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான ஒன்லைன் விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார். மேற்படி முடிசூட்டு விழாவானது இம்மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.௦௦ மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கவுள்ளது. இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்தியாவில் நடைபெறும் பயிற்சி கற்கைநெறிகளில் கலந்து கொள்ளும் இலங்கை பாதுகாப்பு படையினரின் தொழில்முறை தரத்தை இந்திய விமானப்படைத் தளபதி பாராட்டினார். இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை (மே 03) சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இரு … Read more

பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, லெப்டினன்ட் கேர்ணல் ரக்ஷித … Read more

2023 ஆம் ஆண்டினுள் காணி உரிமைகளை வழங்கும் 2000 காணி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன், நிதியுதவி மற்றும் அரச அளிப்பு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் ஆரம்பம். ஜனாதிபதி ரணிலின் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் அவதானத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை தாரகை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச அளிப்பு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அண்மையில் (29) கலந்து கொண்ட போதே அமைச்சர் ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது கிங்குராக்கொடை பிரதேச செயலகத்தினால் பயனாளிகள் … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களுக்கு பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப்பிரதேசங்களில் காலை … Read more

இந்நாட்டிலுள்ள அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காது, தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்படுங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன

இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காமல் தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்தர வினாத்தாள்கள் பரிசீலிக்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடன் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்கள் உட்பட இலங்கை … Read more

அலங்கார மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளில் அலங்கார மீன் தொழில்துறை மற்றும் நீர்த் தாவர தொழில்துறை முதன்மையானதாக கருதப்படுவதோடு இந்தத் தொழில்துறையில் ஈடுபாடு காட்டுகின்ற பண்ணையாளர்களை அதிகரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாதுக்க, ஹோமாகம பிரதேசங்களுக்கு கடந்த 30 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் பாதுக்க … Read more

வாழைப்பழ ஏற்றுமதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் புதிய வழியாக மாற்றம் …

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழம் செய்கை அதிகரித்துள்ளதால் இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். … Read more

வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தினால் 07 செயலணிகள்

நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது … Read more