இலங்கை இன்று மறுமலர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்துள்ளது

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்- ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீவைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என … Read more

இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவையில் உள்ள உயிர்காக்கும் நிலைகளில் பணிபுரியும் இலங்கை கடலோர காவல்படை பணியாளர்களால், 1139 கடலாமை முட்டைகள் இயற்கை வாழ்விடங்களில் இருந்து வெளியெடுக்கப்பட்டது பாதுகாப்பாக அடைகாக்கப்பட்டது என இலங்கை கடலோர காவல்படை ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, மொரகல்ல மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளில் இருந்தும் இக்காலப்பிரிவில் 3714 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடுக்கப்பட்டுள்ளது. … Read more

நைஜீரிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் இராணுவத் தளபதியை சந்திப்பு

நைஜீரியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 17 கல்விசார் உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு ஆறு நாள் சுற்றுப்பயணத்தை மேற் கொண்டுள்ளனர். எயார் கொமடோர் ஒசிசினகாசெது யூபிஎடிஐகேஈ அவர்கள் தலைமையிலான குழு ​செவ்வாய்கிழமை (25) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். இராணுவத் தலைமையகத்தை வந்தடைந்த தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே … Read more

விமல் வீரவன்சவினால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் பா. உ. விமல் வீரவன்ச அவர்களால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. தென் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை கூட்டம் 2022 ஜூலை 07ஆம் திகத அன்று இந்தியாவில் நடைபெற்றது. அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் … Read more

கடற்றொழில் அபிவிருத்திக்கு சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற முயற்சி

கடற்றொழில் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வரைபுகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை சவுதி அரசாங்கத்திடம் … Read more

“ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி” ஒக்டோபர் 20 முதல் 29 வரை

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி” தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அலுலகத்தில் நேற்று (26) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. “ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் வர்த்தக கண்காட்சி” (UAE – Sri Lanka Business Forum and Trade Fair) 2023 ஒக்டோபர் … Read more

கோழி இறைச்சி , முட்டைக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பது குறித்து அரசு கவனம்

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கைத்தொழிலை சீரான முறையில் முன்னெடுத்து, நாட்டின் கோழி மற்றும் முட்டைத் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்வது மற்றும் நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்குவது என்பன குறித்து … Read more

இரட்டை சதமடித்த நிஷான் மதுஷ்க….

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்காவது நாள் போட்டியில் நிஷான் மதுஷ்க இரட்டை சதம் அடித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர், இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 489 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி – குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு

நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நயினாதீவிற்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், முழு திட்டத்தினை சீராக செயற்படுத்தி நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.