அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பா இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்காது, எரிபொருள் பிரச்சினை தீராது, மின்சாரப் பிரச்சினை தீராது என்றெல்லாம் எதிரணிகள் … Read more

பண்டிகை காலத்தில் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி  

பண்டிகைக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.  காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் இன்று (25) நடைபெறுகிறது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இன்று (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அணி வீரர்கள் விபரம் : … Read more

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது

இலங்கையின் பொருளாதாரம் தற்போது மீளக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக மாறியுள்ளதாகவும், சர்வதேச சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பான மூன்றாவது நாளாக இன்று (24) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தினால் எமது நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்;. ‘சிலர் தங்களுடைய அரசியல் அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்காக பொய் சொல்கிறார்கள், எங்களிடம் சில … Read more

பத்து அத்தியவசியப் பொருட்களி விலைகள் குறைப்பு – லங்கா சதொச அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் அமுலுக்குவரும் வகையில் பத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, செத்தல் மிளகாய், வெள்ளைப் பூண்டு, நெத்தலி, கடலை, உள்நாட்டு சம்பா, டின் மீன், பெரிய வெங்காயம், உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி மற்றும் வட்டானா பருப்பு ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும். ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை முழுமையான விடியலாக கருதக்கூடாது – அமைச்சர் டக்ளஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கு கிடைத்த முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட ஏனைய நிதி நிறுவனங்கள், … Read more

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை (25) மு.ப. 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டை, கடுவெல ஆகிய மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை (25) ஆரம்பமாகவுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், நாளை (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஒரு நாள் போட்டி அட்டவணை … Read more

ஆசிரியர் போட்டிப் பரீட்சை நாளை இடம்பெற மாட்டாது

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நாளை (25) நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை இடம்பெறமாட்டாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை, 2023.03.25 ஆம் திகதி (நாளை) நடைபெறவிருந்தது. இப்போட்டிப் பரீட்சை, உயர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் … Read more

இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்குவதற்கான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்தினாலும், மக்களின் தியாகத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் தகுதியின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு போதுமான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின், யார் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான கடன் வசதிகள் மற்றும் எதிர்கால … Read more