வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீனப்படுத்த திட்டம்

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். • காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி … Read more

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் … Read more

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் செல்ல வேண்டும்

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. எதிர்க்கட்சியினர் பொறுப்பை ஏற்க மறுத்தனர். பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என்றார்கள். எல்லா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் … Read more

உலக நீர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் சுத்திகரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உலக நீர் தின விழா நேற்று (22) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை … Read more

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளாவிட்டால், பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று … Read more

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சிறந்த நூறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் … Read more

இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதிக படையினருக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு

தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் சந்தித்தது. ஐ.நா தூதுக்குழுவில் திரு. ஜேம்ஸ் விக்டர் டி ரோகோல், கேணல் லாரன்ஸ் கபினா, லெப்டினன் கேணல் ராஜீவ், திரு. மார்க் … Read more

19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களில் வெற்றி

அபுதாபியில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.   இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் 298 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துவிந்து ரணதுங்க 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தினுர கலுபஹன 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை … Read more

ஹஜ் யாத்திரைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கவினால் … Read more

டி.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்கை நாம் ஒதுக்கிய போதும் அதனை செயற்படுத்திய சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது

கடந்த தசாப்தங்களில் அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டது – டி.எஸ். நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு மறைந்த பிரதமர் மகாமான்ய திரு டி.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் … Read more