பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (04) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இதன் போது ,நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில்  சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதுதொடர்பில் விளக்கமளிப்பார். பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோப் குழு அறிக்கைள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதமும் … Read more

பல இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு … Read more

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செய்வதற்கு எதிர்பார்க்கப்படும்  வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்…  

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இன்று (03) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய … Read more

குறைந்த வருமானத்தைக்கொண்ட 33 இலட்ச மக்களுக்கு 3 மாதங்களுக்கு மேலதிக கொடுப்பனவு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதற்கு அமைச்சரவையில் நேற்று (02) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் … Read more

துரிதமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம்

முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம்; காண்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10.  துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல் நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள் வெகுசன ஊடக அமைச்சர் … Read more

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் கௌரவ பிரதமரினால் இணையத்தில் வெளியிடப்பட்டது

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ccf.gov.lk இல் அணுகலாம் மற்றும் “எங்கள் பாரம்பரியம்” (“අපේ උරුමය”) (Our heritage) என்ற புதிய யூடியூப் … Read more

“மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு

“மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு “என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள  வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புனித ரமழான் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு: நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப்  பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.  நீங்கள் எதிர்பார்க்கும் … Read more

நெருக்கடி நிலையில் எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தரப்பினரும் ,இப்போதைய சூழ்நிலையில் தேர்தலை வலியுறுத்த வில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ,புதிய அரசியலமைப்பு … Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதற்கு அமைவாக சமுர்த்திஇ வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு தொiகை பொதுவாக ரூபா 2500.00 வினால் அதிகரிக்கப்படுகிறது.   இதுதொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   07. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி … Read more