நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அரசாங்க முதற்கோலாசான் , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை அடைய முடியாதென ரணதுங்க தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நேற்றைய மேதின ஊர்வலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள், மக்களின் மேம்பாட்டிற்காக … Read more

இந்தியாவில் மேலும் 3 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்றும், இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று (02) புதிதாக 3,157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி

இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால் மா என இந்திய நாணயத்தில் ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளிக்கக் கோரி  தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் … Read more

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் ஆகியவை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் பாலத் திட்டங்கள் மற்றும் உத்தேச திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதன்மையான … Read more

மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் ,சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் அடிக்கடி  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு மற்றும் … Read more

காங்கேசந்துறையிலிருந்து – பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதாகவும் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் டீயு – 4 வகை கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் AB-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒன்பது இலட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சு … Read more