போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுங்கள்

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: மே தின வாழ்த்துச் செய்தி             உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் … Read more

இன்று இடம்பெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகளும் கூட்டங்களும்

தொழிலாளர் தினமான இன்று அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் சேவைச் சங்க தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் … Read more

இன்று தொழிலாளர் தினம்

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம், இன்று தொழிலாளர் தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் … Read more

உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை – பிரதமர்

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மே தின செய்தி – 2022 மே 01 அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு … Read more

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மேமன் சங்க பிரதிநிதிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது ஹிஜ்ரி 1443 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் அதுபற்றி அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு அடுத்த மாதம் நிவாரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமூக நல நிவாரண முறையொன்று அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (29) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,இதற்காக அவசர தேவைகள் உலக வங்கி நிதியுதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே … Read more

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடு

நாளை இடம்பெறும் சர்வதேச தொழிவாளர் தினத்தை முன்னிட் கொழும்பில்; விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை மாகாணங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் நாளை

சர்வதேச தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் நாளை பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் தலைமையகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் … Read more

இராணுவ தலைமையக முஸ்லிம் உறுப்பினர்கள் இராணுவ தளபதியவர்களுடன் ‘இப்தார்’ நிகழ்வில் பங்கேற்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பங்கேற்புடன் இராணுவ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் சூரியன் மறையும் வேளையில் நோன்பு திறக்கும் இப்தார் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டனர். உலக அளவில் முஸ்லீம்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை முன்னிட்டு இராணுவ முஸ்லீம் சங்கத்தினால் இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக அமைந்திருந்ததோடு, இதன்போது நாடு செழிப்புற … Read more

படையினரால் கடைக்காடு பகுதியில் சிறுவர் பூங்கா நிர்மாணிப்பு

யாழ். கடைக்காடு மற்றும் கெவில் பொதுப் பிரதேசங்களில் உள்ள வறுமையான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சம வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின், 55 வது படைப் பிரிவினர் தென்னிலங்கையினரின் நிதியுதவியுடன் ஓய்வு ,பொழுதுக்கு மற்றும் வாசிப்பு வசதியுடன் கூடிய சிறுவர் பூங்காவை நிர்மாணித்தனர். ‘சிறுவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நிதி உதவிகளை வழங்கிய திரு பியதாச கமகே மற்றும் திரு துஷார அமரசிங்க ஆகியோரின் … Read more