வாரத்தில் 7 நாட்களிலும் ஊடக கலந்துரையாடல் – புதிய ஊடக அமைச்சர் தெரிவிப்பு

வாரத்தில் 7 நாட்களில் வெகுஜன ஊடக அமைச்சு ஊடாக ஊடக கலந்துரையாடலை நடத்தி பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் … Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இன்று (26)  ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக … Read more

ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்பது அரசியல் யாப்பிற்கு அமைவாக இடம்பெற வேண்டிய விடயம் – அமைச்சரவை பேச்சாளர்

ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு கோசங்கள் மூலம் ஜனாதிபதியையோ பிரதமரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் நாலக்க கொடஹேவா  தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிற்கு பதிலாக,  டி.பி.விஜயதுங்க இடைக்கால நிர்வாகத்திற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி … Read more

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம்: சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வு – பிரதமர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 19ஆவது திருத்தத்தில் தேவையான மற்றும் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது. இதன் போது இது தொடர்பான ஆலோசனையை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்தார். திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க பிரதமர் அமைச்சரவையின் அனுமதியை … Read more

மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

நேற்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு, மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக என்று சபை தெரிவித்துள்ளது. மேலும், A முதல் L வரையிலான வலயங்களுக்கும், P முதல் W வரையிலான வலயங்களுக்கும் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையிலான நேரத்தில் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு … Read more

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி  

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை இலக்கம் 01 இல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதனை பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே கலந்துகொள்ளவுள்ளார். இவர் தற்பொழுது பொருளாதாரக் … Read more