இத்தாலி ,இலங்கைக்கு  125 மில்லியன் ரூபா அவசர நிதி உதவி

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ,இலங்கை அரசாங்கத்திற்கு ,ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக ,கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம் ,இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப … Read more

மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து பதில் கடிதம்…

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி  அவர்கள், பிரதமர் அவர்கள்,   எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளால் 2022.04.20ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்கோள், “அதிவணக்கத்திற்குரிய உயர் தலைமை தேரர்களே, நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக, … Read more

3,600 மெட்ரிக் தொன் எரிவாயுடனான கப்பல் நாளை இலங்கையை வந்தடையும்

மூவாயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த காஸ் நாளை மறுதினம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஏழாயிரத்து 200 மெட்ரிக் தொன் எரிவாயுடனான இரண்டு கப்பல்கள் ,இரண்டு வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 90% மாக அதிகரிப்பு

கடந்த சில வாரங்களில் வெளிவந்த கொரோனா தரவுகளின்படி, இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஞாயிறிலிருந்து நேற்று வரைக்குட்பட்ட காலகட்டத்தில்மட்டும், இந்தியாவில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் ஏப்ரல் 18 முதல் 24 வரைக்குட்பட்ட காலத்தில் சுமார் 15,700 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,050 என்றே இருந்தது. கிட்டத்தட்ட 95% அதிகம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. கிட்டதட்ட 11 வாரம் … Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா – முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தமிழகத்தில் கொரோனா வைரசு தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவல் அதிகமாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கு பொதுமக்கள் முக கவசம் அணியாமை முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட … Read more

துப்பாக்கி பிரயோகம் குறித்து கேகாலை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதி மன்றதில் சாட்சியம்

ரம்புக்கனையில் இடம்பெற்ற பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்ப்பட்ட அமைதியின்மையை  கட்டுப்படுத்துவதற்காக பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் அது முடியாமற் போனது. பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் பொது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தாம் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தியதாக கேகாலை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. யு. கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேகாலை நீதவான் நீதி மன்றத்தில் நீதவான் வாசனா … Read more

கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more