எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரை

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஊடகங்களுக்காகவே  ஆகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் இன்று (22)  தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரை நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக உரையாற்றுமாறு கூறுங்கள். இவர் உரையாற்றுவது ஊடகங்களுக்கே ஆகும். ஊடக கலந்துரையாடலை நடத்தி அதில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்றும் குறிப்பிட்டார்.

ப்ளூ பிளானட் நிதியத்துடன் இலங்கை ஒத்துழைப்பு

ஐக்கிய இராச்சியத்தின் 500 மில்லியன் பவுன் புளூ பிளானட் நிதியம் கடல் சூழலைப் பாதுகாக்கவும், வறுமையைக் குறைக்கவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, வெப்பமயமாதல் கடல் வெப்பநிலை மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து கடலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி வரவு செலவுத் திட்டத்தால் நிதியளிக்கப்பட்டதுடன், ப்ளூ பிளானட் நிதியானது கடல்சார் பிரச்சினைகளில் ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய தலைமையின் ஒரு முக்கிய பகுதியாகும். 2030 … Read more

41 பேர் கொண்ட குழுவின் அரசியலமைப்பு முன்மொழிவுகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேறி ,தனியான குழுவாக செயற்படுகின்ற 41 பேர் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவுகள் இன்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன. தனக்கு கிடைத்துள்ள அனைத்து அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தின் அம்சங்களை நீக்கிவிட்டு 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஜனநாயக அம்சங்களை மீண்டும் அரசியலமைப்பில் இணைத்து அதிகாரத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் 21ஆவது திருத்தச் சட்டம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது என்று … Read more

மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன – கடற்றொழில் அமைச்சர்

நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அடைக்கப்பட்ட கூடுகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்தி செய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய விவகாரங்களுக்கான பிரிவின் இலங்கை மற்றும் மாலைதீவு  பிரதிநிதி விம்லேந்திரா ஷாரனுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளின் தற்போதைய … Read more

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை ,கல்விப் பொதுத் தராதர சாதாரண, தர உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும். இது ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை, 2022ஆம் … Read more

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இன்று தெளிவுபடுத்துவார்

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய  பேச்சுவார்த்தை குறித்து இன்று தெளிவுபடுத்துவார்.  

வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) அறிவித்தார். பின்வரிசை உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்கள், பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்போது தற்போது பின்பற்றப்படுகின்ற முறையியலின் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்ற அனைத்து நாட்களிலும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வினாக்களைக் கேட்பதற்கான வாய்ப்பு கிடைப்பதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். இந்த … Read more

அமரர் சந்திரசேகரன் கனவை நனவாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட அமைச்சின் கடப்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்

மலையக மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாக இலக்குடன் செயல்படுவதாக தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சர் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,இவ்வாறு குறிப்பிட்ட அவர், இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதனை மதிக்கிறேன் என்றும்கூறினார். … Read more

புதிய அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில்  சந்தித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்க தூதுவர் தூதுவரை வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமுகமான … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் … Read more