அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை  செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் … Read more

வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகளுக்கு சபை அனுமதி

வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்ட நான்கு கட்டளைகளுக்குப் பாராளுமன்றம் இன்று (21)  அனுமதி வழங்கியது. இதற்கமைய, 2021.11.23 திகதிய 2255/8 ஆம் இலக்க, 2021.12.21ஆம் திகதிய 2259/9 ஆம் இலக்க, 2021.12.31ஆம் திகதிய 2260/72 ஆம் இலக்க, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் விவாதம் இன்றி சபையில் அங்கீகரிக்கப்பட்டன.   கீழ்வரும் இணைப்புக்களில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களைப் … Read more

மட்டக்களப்பு ,சியோன் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டை நினைவுகூறும் முகமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) திகதி காலை 8.30 மணிக்கு விசேட தேவ ஆராதனைகள் இடம்பெற்றன. சியோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஆண்டு இதே நாளில் 31 உயிர்கள் சியோன் தேவாலயத்தில் பேர் உயிரிழந்ததை நினைவு கூறும் முகமாகவே இன்றைய தினம் சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பில் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர். இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும்இ களுவாஞ்சிக்கடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும்இ ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 நோயாளர்களும்இ செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நோயாளர்களும்இ கோரளைப்பற்று மத்தி சுகாதார … Read more

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கடமையைப் பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்படமாட்டாது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.    

மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஏப்ரல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும்  என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், சப்ரகமுவ மற்றும் … Read more