இன்று முதல் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (21) முதல் மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை நீக்க கடந்த 18 ஆம் திகதி (2022.04.18) சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளாவிய ரீதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடுவதன் காரணத்தினால் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் … Read more

சுவீகரிக்கப்படவேண்டிய சொத்துக்கள் இருக்குமாயின் வழக்கு தாக்கல் செய்யுங்கள்

தமது சொத்துக்களை கணக்காய்வு செய்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 12 வருட காலப்பகுயில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார். தனது அல்லது குடும்பத்தை சேர்ந்தவர்கள் முறைகேடாக திரட்டிய சொத்துக்கள் உலக நாடுகளில் இருக்குமாயின் அது தொடர்பில் வழக்கு பதிவு செய்யுமாறும், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் :பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து  இன்று (21)  காலை பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில், கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம் முஷர்ரப் தனது கடமையைப் பொறுப்பேற்றார்

புடவைக் கைத்தொழில், உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷர்ரப்நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கிராமிய பொருளாதார பயிர்ச் செய்கை மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நோத்சீ வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. வடகடல் நிறுவனத்தின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு தேவையான சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான  உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்ட … Read more

றம்புக்கணை பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

றம்புக்கனை பொலிஸ் பிரிவில், அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.. ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எரிபொருள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதயடுத்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ரஷ்யா ,இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம்

இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ரஷ்ய அதிகாரிகள் இது பற்றி எதிர்வரும் 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் வணிகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியும் ரஷ்யாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. இதேவேளை,மீதான தாக்குதலை தொடங்கிய … Read more

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்: இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்றுஇ வருடங்கள் பூர்த்தி ஆகிறது. உயிர்த்த ஞாயிறு தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான தினமாகும். கடந்த 2019ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் ,கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்கயில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சில முக்கிய ஹோட்டல்களுக்கும் பயங்கரவாத தாக்குல் நடத்தப்பட்டது. . இந்த புனித நாளில் கிறிஸ்தவ … Read more

மலேரியாவை ஒழித்த நாடு என்ற வெற்றியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்

மலேரியா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலை நிறுத்த வேண்டும் என்று பொது சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ். எம். ஆர்னோல்ட் தெரிவித்தார். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. … Read more